ஓட்டுநர் இல்லாமல் மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

ஓட்டுநர் இல்லாமல் மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனம் அறிமுகம்

துபாய், ஏப். 10- துபாயில் 'கஸ் டம் ஷோ' என்ற தலைப்பில் மேம்படுத்தப்பட்ட 3 நாள் வாகன கண்காட்சி நேற்று (9.4.2021) தொடங்கியது. இந்த கண்காட்சியை தீய ணைப்புத்துறையின் பொது இயக்குநர் ராஷித் தானி அல் மத்ரூசி தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம் புதி தாக அறிமுகம் செய்யப்பட்ட மின்சாரத்தால் இயங்கும் தீயணைப்பு வாகனத்தின் சாவி ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

 இந்த மின்சார தீயணைப்பு வாகனம் ஆஸ்திரிய நாட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த வாகனம் சாதாரண தீயணைப்பு வாக னத்தை விட 20 மடங்கு வேக மாக செல்லக்கூடியது. அதே போல 40 சதவீதம் கூடுதல் செயல்திறனுடையது.

இதன் உட்புறத்தில் ஓட்டு னர் அமரும் பகுதியில் 17 அங் குலம் அளவுள்ள எல்..டி. திரை உள்ளது. இதில் உள்ள தொடுதிரை அமைப்பில் ஸ்மார்ட் முறையில் வாக னத்தை கட்டுப்படுத்தலாம்.

அதேபோல இதனை தொலைதூரத்தில் இருந்த படியும் இயக்க முடியும். அதாவது ரெலிமேட்டிக் தொழில்நுட்பம் மூலம் இந்த வாகனத்தை ஓட்டுநர் இல்லா மலேயே தீயணைப்புத்துறை யின் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி இயக்கலாம். இந்த வாகனத்தில் 6 தீய ணைப்பு ஊழியர்கள் பயணம் செய்யலாம். இதில் உள்ள தொட்டியில் 4 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம். அதேபோல மின்சாரத் தீ போன்றவற்றை கட்டுப்படுத் தும் நுரை திரவம் 400 லிட் டர் தொட்டியில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. வெறும் 40 நிமிடங்களில் 80 சதவீதம் சார்ஜ் ஏற்றிக் கொள் ளலாம். அதேபோல வாகனத் தில் 8 மணி நேரம் தொடர்ந்து தீயணைப்புப்பணியை மீட்புக்குழுவினர் மேற்கொள் ளலாம். மேலும் 500 கி.மீ தொலைவு இடைநில்லாமல் பயணம் செய்யலாம். இந்த வாகனம் சந்தைப்படுத்தப்பட வில்லை. துபாய் தீயணைப்புத் துறைக்கு மட்டும் பெறப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment