வைத்தீசுவரன்கோயில், ஏப். 1- மயிலாடு துறை மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 'திராவிடம் வெல்லும்' தொடர் தெரு முனைப் பிரச்சாரம் 30.3.2021 மாலை வைத்தீசுவரன்கோயில் கடைவீதியில் தொடங்கியது.
மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை வகித்தார். நகர திமுக செயலாளர் அன்புச்செழியன், நகர அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் நாகையா ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட ப.க. தலைவர் ஞான.வள்ளுவன் வரவேற்புரை நிகழ்த்
தினார்.
பெரியாரிய உணர்வாளர்கள் அமைப்பை சேர்ந்த தோழர்கள் ரவி, பரசுராமன், ஆசிரியர் வெண்மணி, சட்டநாதன் ஆகியோர் சீர்காழி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.பன்னீர்செல்வத்திற்கு வாக்குக் கேட்டு பேசியபின் மாவட்ட கழக தலைவர் கடவாசல் குணசேகரன் தி.மு.க. வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதற்கான விளக்கங்களை விடுதலை யில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி களைப்படித்து கூடியிருந்த மக்களிடையே விரிவான உரை நிகழ்த்தினார்.
மக்கள் பெருமளவில் கூடி ஆர்வத் துடன் பேச்சைக் கேட்டனர்.
இதனிடையே கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் இடையில் வந்த காவல் துறையினர் கூட்டத்தை நிறுத்தச்சொல்ல, பிரச் சாரத்திற்கு தேர்தல் அலுவலர் கொடுத் திருந்த அனுமதி கடிதத்தைக்காட்டிய மாவட்டத் தலைவர் குணசேகரன் "நாங்கள் பெரியார் தொண்டர்கள். சட்டத்தை மீறி நடக்க மாட்டோம். எங்களால் உங்களுக்கு பிரச்சினை வரும் வகையில் நடக்கமாட்டோம்" என்றதும் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு கை கொடுத்து கூட்டம் தொடர்ந்து நடை பெற அனுமதித்தனர்.
கூட்டத்தில் கொள்ளிடம் ஒன்றிய கழக செயலர் பாண்டுரங்கன் பரிந் துரையில் ஆச்சாள்புரம் தோழர் பாண்டி யன் கழகத்தில் இணைந்தார்.
பின்னர் இரவு ஒன்பது மணிவரை புங்கனூர், அகணி, கொண்டல், வள்ளுவ குடி ஆகிய இடங்களில் இப்படையின் பிரச்சாரம் நடைபெற்றது.
No comments:
Post a Comment