மனநிலையை காட்டும் புரதங்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

மனநிலையை காட்டும் புரதங்கள்!

 மனச்சுமை, மனச் சிதைவு போன்ற உளவியல் குறைபாடுகளை உறுதி செய்ய, உளவியல் மருத்துவர்களால் தான் முடியும். ஆனால், இவற்றை, உடலியல் அறிகுறிகளால் கண்டறிய முடியுமா என, ஒருபக்கம் ஆய்வு நடக்கிறது. அண்மையில், தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உலகின் முதல் உடலியல் அடிப்படையிலான உளவியல் சோதனையை வடிவமைத்துஉள்ளனர்.

மனச் சுமை போன்ற குறைபாடுகள் உள் ளோருக்கு, மூளையில் உற்பத்தியாகும், பி.டி.என்.எப்., எனப்படும் நியூரோட்ரோபிக் காரணி புரதங்களின் அளவுகள் மாறுபடுவதுண்டு. புரத அளவு மாறுபாட்டை வைத்து, ஒருவருக்கு இருப்பது மனச்சிதைவா, அல்சைமர்ஸ் நோயா என்பது முதல் தற்கொலை செய்து, கொள்ளும் மனநிலை கொண்டவரா என்பது வரை அறிய முடியும்.

இந்த மாறுபாட்டை வைத்து ஆஸ்திரேலிய மருத்துவர்கள் நம்பகமான சோதனை முறையை கண்டறிந்துள்ளனர்.ஜர்னல் ஆப் சைக்கியாட்ரிக் ரிசர்ச் இதழில் வெளியாகியுள்ள இப் புதிய சோதனை முறை நடமுறைக்கு வந்தால், உளவியல் குறைபாடு உள்ளோரை துல்லியமாக கண்டறிய முடியும்.

No comments:

Post a Comment