உலகில் பேச்சு வழக்கு இல்லாத,(130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 45ஆயிரம் மக்களால் மட்டுமே பேசப்படுவதாகச் சொல்லப்படும்) "சமஸ்கிருத மொழி" வளர்ச்சிக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ள தொகை " ரூபாய் 644 கோடி". ஆனால் நம் உணர்வில் - உயிரில் கலந்திருக்கும் உலகில் மூத்த உயர்தனிச் செம்மொழியான தமிழ் மொழி வளர்ச்சிக்கு (மூன்று ஆண்டுகளுக்கு) ஒதுக்கிய நிதி வெறும் "ரூ. 29 கோடி". (அதுவும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னாட்டு மொழிகளுக்கும் சேர்த்துத்தான் ரூபாய் இருபத்தொன்பது கோடி ஒதுக்கீடாகும்) .
தமிழகம் வரும் போது எல்லாம் போலிக்கண்ணீர் விட்டு கந்துவட்டி மார்வாடிபேசும் தமிழைவிட கொச்சையான மொழியில் திருக்குறள் ஆத்திச்சூடி சொல்லிக்கொண்டு தமிழ் தொன்மையான மொழி என்றும்,
செல்லுமிடம் எல்லாம்
திருக்குறளை மேற்கோள் காட்டியும் பேசி
தமிழ் நாட்டு மக்களை ஏமாற்றுவது ஏன் ?
No comments:
Post a Comment