மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி எவ்வளவு ? அடிக்கல் நாட்டியது அவ்வளவுதானா? மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவருவோம் என்று சொன்ன பா.ஜ.க. - ஏழு ஆண்டுகளில் செய்தது என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி எவ்வளவு ? அடிக்கல் நாட்டியது அவ்வளவுதானா? மாற்றுப் பாதையில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவருவோம் என்று சொன்ன பா.ஜ.க. - ஏழு ஆண்டுகளில் செய்தது என்ன?

மதுரை மேற்கு, திருப்பத்தூர், காரைக்குடியில் தமிழர் தலைவர் பரப்புரை

நமது சிறப்பு செய்தியாளர்

மதுரை, ஏப்.3 மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யின் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டு, 2.4.2021 அன்று மதுரை மேற்கு, திருப்பத்தூர், காரைக்குடி தொகுதிகளில் தமிழர்தலைவர் ஆசிரியர்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி தி.மு.. வேட்பாளர் சி.சின்னம்மாள் அவர்களை ஆதரித்து மதுரை ஜெய்ஹிந்த்புரம்  ஜீவா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.  (2.4.2021)

கி. வீரமணி அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதன் விவரம் வருமாறு:

 மதுரை மேற்கு தொகுதி பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மதுரை மேற்கு  தொகுதி தி.மு.. வேட்பாளர் சி.சின்னம்மாள் அவர்களை ஆதரித்து மதுரை ஜெய்ஹிந்த்புரம்  ஜீவா நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப.முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் .முருகானந்தம் வரவேற்புரை வழங்கிட தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர் தே.எடிசன்ராசா, அமைப்பு செயலாளர் வே. செல்வம், மாநில ..தலைவர் வா.நேரு, மாவட்ட காப்பாளர் சே.முனியசாமி, மண்டல தலைவர் கா.சிவகுருநாதன், மண்டல செயலாளர் நா.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் காரைக்குடி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து காரைக்குடி அய்ந்து விளக்கு அருகில் நடைபெற்ற  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.  (2.4.2021)

தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக சிறப்புரையாற்றிய திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமது உரையில் குறிப்பிட்டதாவது:

அடிப்படையில் பெரிய வேறுபாடு கொண்ட தேர்தலாகும் இந்த தேர்தல். கடந்த பத்து ஆண்டுகளாக நடந்துவரும் ஊழலாட்சியை அகற்றிட, கடந்த நாலாண்டுகளில் அடிமை சாசனம் எழுதி கொடுத்த ஆட்சியை அகற்ற வாக்காளர் எதிர்பார்த்து வருவது தான் இந்த தேர்தலில் சிறப்பு. மக்கள் ஒன்றில் தெளிவாக உள்ளனர்‌.நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் உதயசூரியன் சின்னத்தில் தான் வாக்களிக்கப் போகிறோம் என்று உறுதியாக இருக்கிறார்கள்.

கண்ட வித்தைகளையும் செய்ய பார்க்கிறார்கள். மோடி வித்தையெல்லாம் இந்த மண்ணில் பலிக்காது.

பக்தியை காட்டி ஓட்டுகளை வாங்கலாம் என்று வேடம் போடுகிறார்கள். இன்று காலையில் மதுரையில் பிரதமர் பேசினார்.

நிச்சயமாக எய்ம்ஸ் மதுரைக்கு வரும் மதுரைக்கு வரும் என்று. இவ்வளவு பெரிய திட்டத்தை செயல்படுத்த இவ்வளவு நாளா?

மத்திய பட்ஜெட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? என்று எல்லோரும் கேட் டோம். 'ஜப்பான்ல கேட்டிருக்கோம். வந்துரும்னு' பதில் சொல்கிறார். வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறதே?

வேலைவாய்ப்பு தருவதாக சொன்னீர்களே தந்தீர்களா?

இந்த மண் பெரியார் எனும் கற்பாறை மீது கட்டப்பட்ட மண். இங்கே உங்களது ஏமாற்று வேலைகள் பலிக்காது. இந்த தொகுதி வேட்பாளர் அருமைத் தாய் சி.சின்னம்மாள் அவர்கள் சட்டமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுப்பார். வைகை ஆற்றில் போய் தெர்மோக்கோல் விடமாட்டார்.(சிரிப்பு கைதட்டல்). அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மு.சிதம்பரபாரதி, சி.பி.அய். மாவட்ட செயலாளர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கதிரவன், .தி.மு.. பொறுப்பாளர் மகபூப்ஜான், இந்திய யூனியன் முசுலீம் லீக் மாவட்ட செயலாளர் அப்துல் காதர் ஆலம், தமிழ்ப்புலிகள் கட்சி பொறுப்பாளர் சிதம்பரம், ஆதித்தமிழர் பேரவை ரமேஷ், திராவிட இயக்க தமிழர் பேரவை அமர்நாத், வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனர் அம்மாசி, விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆதவன், சிவகாசி வானவில் மணி, சுப.பெரியார் பித்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் இரா.திருப்பதி நன்றி கூறினார்.

 

திருப்பத்தூர் தொகுதி பரப்புரை

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருப்பத்தூர் தொகுதி தி.மு.. வேட்பாளர் கேஆர்.பெரியகருப்பன் அவர்களை ஆதரித்து திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில்  நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் .சுப்பையா தலைமை வகித்தார்.

மாவட்ட துணைத் தலைவர் செ.தனபாலன் வரவேற்புரை வழங்கிட, மாவட்ட செயலாளர் பெ.ராஜாராம் முன்னிலை வகித்தார்.

தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக சிறப்புரையாற்றிய திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தமது உரையில்:

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.. வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களை ஆதரித்து திருப்பத்தூர் அண்ணாசிலை அருகில்  நடைபெற்ற  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  உரையாற்றினார்.  (2.4.2021)

வேட்பாளர்கள் போய் ஓட்டு கேட்ட காலம் போய் வாக்காளர்கள் எப்போது தேர்தல் வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

மோடிக்கு அடமானம் வைத்து விட்டதை மீட்க வேண் டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்து விட்டது. .தி.மு..வுக்கு வாக்களிக்கிறோம் என்று எண்ணாதீர்கள்.அது பா...வுக்கு போடும் ஓட்டுதான்.

வீசுவது இருக்கிறதே அது ஸ்டாலின் அலை தான். மக்களை கணித்து சொல்கிறோம்.தெளிவாகி விட்டார்கள்.

இரண்டு பேருக்கும் போட்டி. யார் முதலில் போய் காலில் விழுவது என்று. அப்படித்தான் .பி.எஸ். .பி.எஸ். எல்லாம்'எஸ்', 'எஸ்' தான்.

மதுரை இராமசாமி - இராஜேஸ்வரி ஆகியோரின் 50ஆம் ஆண்டு இணையேற்பு நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000/- நன்கொடை வழங்கினர். இணையருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். (மதுரை - 2.4.2021)

தேர்தல் நெருங்க நெருங்க அவர்களுக்கு பயம் வந்து விட் டது. அதனால்தான் வருமான வரி இலாகாவை ஏவி விட்டு இடையூறு செய்ய பார்க்கிறார்கள். தளபதி ஸ்டாலின் அவர்கள் மிக துணிச்சலாக அறிவித்துள்ளார். இந்த தாக்குதலை எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன், தொண் டர்கள்  பாடுபட்டு வெற்றி பெறச் செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார்.

காமராஜரை வைத்து ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி திட்டத்தை ஒழித்தார் தந்தைபெரியார்.

அதை மீண்டும் கொண்டு வரத்தான் இப்போது மத்திய பா...அரசு முயற்சிக்கிறது.

இவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று  தமது உரையில் குறிப்பிட்டார்.

பரப்புரைக் கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் .இன்பலாதன், மணிமேகலை சுப்பையா, மாவட்ட துணை செயலாளர் வைகை .தங்கராசன், தி.மு..நகர செயலாளர் கார்த்திகேயன், அவைத்தலைவர் ரவி, தி.மு..மாவட்ட பிரதிநிதி மதியழகன், காங்கிரஸ் கட்சி தலைவர் சிதம்பர பாரதி,  வழக்குரைஞர் ஜெயச்சந்திரன், .தி.மு.. நகர செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட  அமைப் பாளர் அனந்தவேல், புதுகை மாவட்ட  செயலாளர் பெ.வீரப்பன் உள்ளிட்ட திராவிடர் கழக மற்றும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் ஒன்றிய தலைவர் தமிழ்வாணன் நன்றி கூறினார்.

 

காரைக்குடி தொகுதி பரப்புரை

மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணியின் காரைக்குடி தொகுதி காங்கிரஸ் கட்சி வேட் பாளர் எஸ்.மாங்குடி அவர்களை ஆதரித்து காரைக்குடி அய்ந்து விளக்கு அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் .அரங்கசாமி தலைமையேற்க, மாவட்ட செயலாளர் கு.வைகறை வரவேற்புரை வழங்கிட, மண்டல தலைவர் சாமி.திராவிடமணி, மண்டல செயலாளர் .மகேந்திரராசன் மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், மாவட்ட துணை செயலாளர் ..பழனிவேலு, நகர தலைவர் .செகதீசன், நகர செயலாளர் தி.கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர்கள் தி.என்னாரெசு பிராட்லா, இரா.பெரியார்செல்வன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

நிறைவாக சிறப்புரையாற்றிய திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தனது உரையில் குறிப்பிட்டதாவது:

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்களை சந்தித்து பேசினோம். அந்த வேட்பாளரை வெற்றி பெற வைத்தது போல

இந்த தேர்தலிலும் நமது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாங்குடி அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

இங்கே அடிக்கக் கூடிய ஸ்டாலின் அலையில் பிரதமர் மோடி நீந்திப் பார்க்கிறார்.

பிரதமருக்கு திடீரென்று தமிழ் மீது காதல் வந்திருக்கிறது. அதை நம்ப மக்கள்  தயாரில்லை. கரோனாவை விரட்ட மோடி கைதட்டுங்கள என்றார். விளக்கு ஏற்றுங்கள் என்றார். ஆனால் அறிவியல் கண்டுபிடிப்பு தான் காப்பாற்றி இருக் கிறது.

கல்வி உரிமை, உத்தியோக உரிமை, வாழ்வுரிமை அனைத்தையும் மத்திய அரசு பறித்துள்ளதே. இதை கண்டும் காணாமல் இருக்கும் அடிமை சாசனம் எழுதி கொடுத்த ஆட்சியை அகற்ற வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'நீட்' தேர்வை ஒழிப்பது தான் முதல் பணி என்று தி.மு.. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரி படிப்புக்கும் 'நீட்' தேர்வை கொண்டு வர இருக்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றால் நமது வேட்பாளர் திரு.மாங்குடி அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். இவர் எளியவர். பண்பாளர். சட்டத்தை நீதிமன்றத்தை மதிக்கக் கூடியவர். (சிரிப்பும் கைதட்டலும்). தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைந்திட அனைவரும் ஆத ரிக்க வேண்டும். திராவிடம் வெல்லும்.நாளைய வரலாறு அதை சொல்லும் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.

பரப்புரைக் கூட்டத்தில் தி.மு.. மாநில இலக்கிய அணி தலைவர் மேனாள் அமைச்சர் மு.தென்னவன், நகர தி.மு..செயலாளர் நா.குணசேகரன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் பாண்டி மெய்யப்பன், சி.பி.அய். நகர செயலாளர் சீனிவாசன், சி.பி.எம். நகர செயலாளர் சின்னக்கண்ணன், .தி.மு.. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பசும்பொன் மனோகரன்,  பொதுக்குழு உறுப்பினர் தி.செயலெட்சுமி, பேரா.மு.சு.கண்மணி, சொ.ஜான்சிராணி, மாணவர் கழகம் ஜா..டார்வின் தமிழ், .. எழுத்தாளர் மன்ற செயலாளர் .குமரன்தாஸ், திராவிட இயக்க தமிழர் பேரவை நகர செயலாளர் .நவில், ... பீர்முகம்மது உள்ளிட்ட  திராவிடர் கழக மற்றும் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment