பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன் பேசுவதில்லை? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 9, 2021

பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு குறித்து ஏன் பேசுவதில்லை?

பிரதமருக்கு  ராகுல்  கேள்வி

புதுடில்லி,ஏப்.9- தேர்வு நேரத் தில் மாணவர்களுடன் கலந்துரை யாடுவது போல், பெட்ரோல், டீசல் விலை உயரும் போது ஏன் பிரதமர் மோடி ஏதும் பேசுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி மேனாள் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரைப் பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது, “மத்திய அரசின் வரிவசூலால், ஒரு காருக்கு பெட்ரோல், டீசல் நிரப்புவது என்பது தேர்வைவிட எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. பெட்ரோல், டீசல் விலை குறித்து ஏன் பிரதமர் மோடி பேசுவதில்லை. பெட்ரோல், டீசலுக்காக செலவிடும் தொகை குறித்தும் மோடி பேச வேண்டும்எனத் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயம் கலைப்பாம்!

சென்னை,ஏப்.9- முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது அவர் முயற்சியால் 15.9.2003 அன்று சென்னையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. சென்னை யிலுள்ள அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை மத்திய அரசு கலைத்துள்ளது. அறிவு சார் சொத்துரிமை மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உள்பட 9 முக்கிய தீர்ப்பாயங்களை மத்திய அரசு கலைத்துள்ளது.


பங்குகள் கையகப்படுத்தலில் சட்டவிரோதம் அம்பானி குடும்பத்திற்கு ரூ.25 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவு

புதுடில்லி,ஏப்.9- பங்குச் சந்தை கண்காணிப்புக் குழுவான செபி முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அவர் களது மனைவிகள் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களுக்கு மொத்தம் ரூ.25 கோடி அபராதம் விதித்தது.

செபியின் 85 பக்க உத்தரவின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் புரமோட்டர்கள் 2000ஆம் ஆண்டில் 6.83 சதவீத பங்குகளை ஆர்.அய்.எல். கையகப்படுத்தியதை அதன் பொதுக்கணக்குக் குழுவில் வெளியிடத் தவறி விட்டனர்.

2005ஆம் ஆண்டில் முகேஷ் மற்றும் அனில் அம்பானி இடையே அவர்களின் தந்தை திருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பிறகு இந்த வணிகங்கள் பிரிக்கப்பட்டன. 1994ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 3 கோடி வாரண்டுகளை மாற்றுவதன் மூலம் 2000ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண் டஸ்ட்ரீஸின் பங்குகளை வாங்கியதாக செபி குறிப்பிட்டுள் ளது. இது சட்டத்தின் கீழ் அத்தகைய கையகப்படுத்துதலுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட 5 சதவீத உச்சவரம்பை விட அதிக மாக இருந்தது. எனவே, பங்குகளை வாங்குவது குறித்து பகிரங்கமாக அறிவிக்க வேண்டிய பொறுப்பு ஜனவரி 7, 2000 அன்று எழுந்தது. செபி விதிமுறைகளின் கீழ், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் எந்தவொரு நிதியாண்டி லும், 5 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளைப் பெறும் ஒரு புரமோட்டர் குழு, பங்குதாரர்களுக்கு ஒரு திறந்த சலுகையை வழங்க வேண்டும்.

சமமற்ற ஆதாயம் அல்லது நியாயமற்ற நன்மையை மதிப்பிடுவதற்கு அளவிடக்கூடிய புள்ளிவிவரங்கள் அல்லது தரவு எதுவும் பதிவில் கிடைக்கவில்லை. இருப்பினும், பொது அறிவிப்பை வெளியிடத் தவறியதால் அறிவிப்புகள் பங்குதாரர்களுக்கு அவர்களின் சட்டரீதியான உரிமைகள் / பங்குகளிலிருந்து வெளியேற வாய்ப்பை இழந்துவிட்டன என்பதே உண்மை.” என்று கூறியுள்ள செபி, இதற்காக 25 கோடி ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

செபியின் உத்தரவின்படி, முகேஷ் மற்றும் அனில் அம்பானி தவிர, அபராதம் விதிக்கப்பட்டவர்களில் நிதா அம்பானி, டினா அம்பானி, கே.டி. அம்பானி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர். நிதா முகேஷ் அம் பானியின் மனைவி மற்றும் டீனா அனில் அம்பானியின் மனைவி ஆவார்.


No comments:

Post a Comment