கரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக மும்பையில் பல தடுப்பூசி மய்யங்கள் மூடப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

கரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரணமாக மும்பையில் பல தடுப்பூசி மய்யங்கள் மூடப்பட்டன

மும்பை, ஏப்.10 மும்பையில் கரோனா  தடுப்பு மருந்து தட்டுப்பாடு காரண மாக நேற்று பல தடுப்பூசி மய்யங்கள் மூடப்பட்டன. இதனால் தடுப்பூசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர்.

மராட்டியத்தில் ஒரு நாள் கரோனா  பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால், பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வம் காட்டி வரு கின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப் பட்டு வருகிறது.

இதற்காக மாநில தலைநகர் மும்பையில் மட்டும் 120 மய்யங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப் பட்டு வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மருந்து இருப்பு இல்லை என்று கூறி 8.4.2021 அன்று மாலையே பல மய்யங்களில் அறிக்கை ஒட்டப்பட் டது. இதனால் தடையின்றி தடுப்பூசி போடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்தநிலையில் நேற்று காலை சந்தேகத்துடனே பொதுமக்கள் தடுப் பூசி மய்யங்களுக்கு வந்தனர். அப் போது பல மய்யங்கள் மூடப்பட்டு இருந்தன. மய்யங்கள் முன்பு காவல் துறையினர் பாதுகாப்பும் போடப் பட்டு இருந்தது. தடுப்பூசி மருந்து இல்லாததால் பொதுமக்களை சுகா தார ஊழியர்கள், காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.

மும்பையில் மொத்தம் உள்ள 120 மய்யங்களில் 75 மய்யங்கள் மூடப் பட்டு இருந்தன. இதில் பல தனியார் மய்யங்கள் ஆகும். மாநகராட்சியின் பி.கே.சி. பிரமாண்ட மய்யத்தில் 200 பேருக்கு மட்டும் தடுப்பூசி போட்ட பின்னர் அந்த மய்யம் மூடப்பட்டது.

தடுப்பூசி மய்யங்கள் மூடப்பட்ட தால், ஆர்வத்துடன் வந்த பொது மக்கள் தடுப்பூசி போட முடியாமல் புலம்பியபடி திரும்பி சென்றனர்.

தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக மத்திய அரசு, மராட்டிய அரசு இடையே ஏற்கனவே வார்த்தை மோதல் ஏற்பட்டு இருந்தது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மராட்டியம் 5 லட்சம் டோஸ் தடுப்பூசியை வீணடித்ததாக குற்றம் சாட்டினார்.

இதற்கு நேற்று பதிலளித்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர்ராஜேஷ் தோபே, மத்திய அரசின் வழிகாட்டு தலின்படி நிர்ணயிக்கப்பட்ட அள வில் இருந்து பாதி அளவு மருந்துதான் வீணானதாக விளக்கம் அளித்தார்.

No comments:

Post a Comment