துபாய், ஏப்.3 துபாயில், இந்த ஆண்டில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என 87 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
துபாய் பொருளாதாரத்துறையின் வர்த்தக இணக்கம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் தலைமை செயல் அதிகாரி முகம்மது அலி ராஷித் லூத்தா கூறியதாவது:-
துபாய் நகரில் ஒவ்வொரு ஆண்டும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல் வேறு விடயங்கள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது துபாய் பொருளாதாரத்துறை சார்பில் மேற் கொண்ட ஆய்வில் அடுத்த 12 மாதங்களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என நம்பிக்கை தெரிவித்து 87 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதில் 90 சதவீதம் பேர் 30 வயது முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இந்த கருத்தானது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மேற்கொள் ளப்பட்டு வரும் ஆய்வில் மிக அதிகமானது ஆகும். இதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தங்களது நிதி மேலாண்மை அதிகரித் துள்ளதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அடுத்த 12 மாதங்களில் இந்த நிதி மேலாண்மையானது மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வின் மூலம் பொருளாதார நிலைமை மேம்பட்டு வருவதுடன், வேலைவாய்ப்பு குறித்த நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்த்துகிறது. வாடிக்கையாளர் மேம்பாடு தொடர்பாக பல்வேறு திட்டங்களை மேற்கொள்ளவும், தனியார் நிறுவனங்கள் தங்களது பொருட்கள் தொடர்பாக விளம்பர யுக்திகளை செயல்படுத்தவும் இந்த ஆய்வு உதவுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment