கொளத்தூரில் ப.சிதம்பரம் பிரச்சாரம்
கொளத்தூர், ஏப்.1 தமிழ்நாட்டின் மொழி, இனம், கலாச்சாரத்தை பாது காக்க மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்று கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட ப.சிதம்பரம் கூறினார்.
சென்னை கொளத்தூரில் போட்டி யிடும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை ஆதரித்து மக்காராம் தோட்டம் பகுதியில் நேற்றிரவு (31.3.2021) பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெ.டில்லிபாபு ஆகியோர் தலைமை தாங்கினர்.தொ.மு.ச. பொருளாளர் நடராசன், தி.மு.க. துணை செயலாளர் தேவஜவஹர் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசிய தாவது:-
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு வெற்றி நடைபோடவில்லை. வெற்று நடை தான் போடுகிறது. எந்தவகையில் தமிழ்நாடு 10 ஆண்டுகளில் முன்னேறி இருக்கிறது? நான் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 105 டாலராக இருந் தது. பெட்ரோல் லிட்டர் ரூ.60-க்கும், டீசல் ரூ.55-க்கும், சமையல் எரிவாயு ரூ.410-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தற்போது கச்சா எண்ணெய் விலை உயரவில்லை. 70 டாலராக குறைந்து இருக்கிறது.
ஆனால் பெட்ரோல் ரூ.94-க்கும், டீசல் ரூ.87-க்கும், சமையல் எரிவாயு ரூ.835 ஆகவும் விற்கப்படுகிறது. 94 ரூபாயில் 33 ரூபாயை வரியாகவும், 87 ரூபாயில் 32 ரூபாயை வரியாகவும் மோடியும், எடப் பாடி பழனிசாமியும் உறிஞ்சுகிறார்கள்.
மத்திய அரசுடன் மாநில அரசு இணக்க மாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அடிமையாக இருக்கக்கூடாது. பிரதமர் நரேந் திர மோடியும், எடப்பாடி பழனிசாமியும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கிறார்கள். அப்போது, இலங்கை அரசுக்கு எதிரான தீர் மானத்தை இந்தியா ஏன் ஆதரிக்கவில்லை? மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு கதி என்ன? குடியுரிமை திருத்தச் சட்டத்தை விலக்கி கொள்வார்களா? இந்த 3 கேள்விகளையும் நீங்கள் கேட்டால் அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோர் அமர்ந்த முதல்-அமைச்சர் நாற்காலியில் நீங்கள் அமர்வதற்கு தகுதியானவர் என்று எடுத்துக்கொள்ள லாம். எடப்பாடி பழனிசாமி ரூ.4.85 லட்சம் கோடி கடனை விட்டுவிட்டு போகப்போகிறார். 2020 - 2021ஆம் ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.65 ஆயிரத்து 994 கோடி ஆகும். இதற்கு மேலும் கடன் வாங்க வேண்டும். எனவே, புது வருடத்தில் தமிழக அரசின் கடன் ரூ.5.5 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கும்.
வெற்றுப்பேச்சு அரசு வேண்டாம். நம் முடைய குரலை கேட்டு செயல்படுகிற அரசு தான் வேண்டும். நம்முடைய கூட்டணி 234 தொகுதி களிலும் வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை ஆகும்.
குறைந்தபட்சம் 200 தொகுதிகளி லாவது வெற்றி பெற வேண்டும் என்பது லட்சியமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால், கோவா, மணிப்பூர், அருணாச் சலபிரதேசம், மத்தியப்பிர தேசம் தேர்தலில் வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. ஆனால், பா.ஜ.க. தேர்தலை திருடிக்கொண்டது.
தமிழ் நாட்டின் இனம், மொழி, கலாச் சாரத்தை பா.ஜ.க.விடம் இருந்து காப்பாற்று வதற்கு உதயசூரியன் சின்னத் துக்கு வாக்களிக்க வேண்டும். மு.க.ஸ்டா லினை முதல்-அமைச்சர் அரியணையில் அமர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ப.சிதம்பரம் அவர்களுக்கு கழகக் கொடிகளோடு கழகத் தோழர்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர். கழகச் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் பரப்புரை புத்தகம் வழங்கப்பட்டது. வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் கி.இராமலிங்கம், செம்பியம் தலைவர் பா.கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment