பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை மாணவர்களின் சிறந்த கருத்துகள் பதிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்நுட்பத்துறை மாணவர்களின் சிறந்த கருத்துகள் பதிவு

வல்லம், ஏப்.1 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் தொழில் நுட்பத்துறை, இளங்கலை இறுதி யாண்டு மாணவர்கள் ஆர். சங்கர், .ஆதிலெட்சுமி, தெ.தனுப்ரியா, கு.நந்தகுமார் ஆகியோர் இணைந்து கோவிட் 19-ம் அதன் தாக்கமும் என்னும் நூலில் ஆசிரியர் குழுவில் இணைந்தும் இந்நூலில் உயிர் மருத்துவ நுண் தொழில்நுட்பம் எனும் பொருண்மையில் ஆழ மான கருத்துக்களை பதிவு செய்துள் ளார்கள். இதனை   India Book of Records & Asia Book of Records  மூலம்  ESN பப்ளிகேஷன்வெளியீட்டு பெருமை சேர்த்துள்ளது இது பல் கலைக்கழகத்திற்கு பெருமையான ஒன்றாகும்.

மேலும் இம்மாணவர்களை பல் கலைக்கழகத்தின் துணை வேந்தர், பதிவாளர், புல முதன்மையர்கள், துறைத்தலைவர் உள்ளிட்ட பேராசி ரியப் பெருமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


No comments:

Post a Comment