பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் திமிர் பேச்சு
"செந்தில்பாலாஜியை எல்லாம் தூக்கி போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும்.. என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாகப் போட்டியிடும் பா.ஜ.க, வேட்பாளர் அண்ணாமலை தோல்வி பயத்தில் பிரச்சாரத்தின்போது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசி வருகிறார்.
அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை தாக்கி அவர் பேசியதாவது "செந்தில்பாலாஜியை எல்லாம் தூக்கிப் போட்டு மிதிச்சேன்னா, பல்லு கில்லு எல்லாம் வெளியே வந்துடும். நான் எவ்ளோ பெரிய பிராடுங்களை எல்லாம் பார்த்துட்டு வந்திருக்கேன்.. நீ எல்லாம் ஒரு ஆளுன்னு.. நீ எல்லாம் ஒரு இதுன்னு.. கையை வெச்சா, அண்ணாமலை வயலன்ஸ்-ன்னு மாத்திடுவியா? அதனால தி.மு.க.காரனுக்கு நான் எச்சரிக்கை வெச்சிட்டு போறேன்.
வன்முறை, வன்மத்தை கையில் எடுப்பதற்கு தயாராக இல்லை.
அகிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எனக்கு இன்னொரு முகம் இருக்கு.
அது கர்நாடக முகம். அதை நான் இங்கே காட்ட வேணாம்னு நினைக்கிறேன். நீ என்ன செய்யிறியோ செய். இதுக்கெல்லாம் பயப்படற ஆள் நான் கிடையாது..என்று பொதுக்கூட்டத்தில் பேசினார். இதனைக் கேட்ட வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
No comments:
Post a Comment