டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· திமுக வேட்பாளரை அச்சுறுத்தும் வகையில் பேசிய அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· 2014-க்குப் பின் மோடி ஆட்சியில் பாரபட்சமற்ற, நியாயமாக செயல்பட வேண்டிய அரசு இயந்திரங்கள், கட்டமைப்புகள் அனைத்தும் பாஜகவின் கட்டுக்குள் உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
· திமுக வேட்பாளர்கள் சிலர் பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் போட்டி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்ய அழைத் தனர். இது அவர்களின் வெற்றிக்கான வாக்குகளை அதிகரிக்கும் எனக் கருதுவதாக சுட்டுரையில் பதிவிட்டுள்ளனர்.
தி ஹிந்து:
· மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பலகார் தொகுதியில் இருந்து போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விருது பெற்ற ஒடுக்கப்பட்டோருக்கான பெங்காலி எழுத்தாளர் மனோரஞ்சன் பைபாரி, ‘பாஜக ஆட்சிக்கு வந்தால், ஏழைகள் இனிமேல் படிக்க முடியாது’என குறிப்பிட்டுள்ளார்.
தி டெலிகிராப்:
· அசாமில் பாஜக வேட்பாளரின் மனைவிக்கு சொந்தமான காரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஒரு அசாம் சாவடியில் மீண்டும் வாக்களிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதுடன், நான்கு வாக்குப்பதிவு அதிகாரிகள் மற்றும் ஒரு காவல் அதிகாரியை இடைநீக்கம் செய்தது.
· எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே ஏன் வருமானவரிச் சோதனைகள் நடக்கின்றன? உத்தரபிரதேசம், பீகார் அல்லது மத்தியப் பிரதேசத்தில் (அனைத்து பாஜக ஆளும் மாநிலங் களிலும்) வருமான வரித் துறை ஏன் இத்தகைய சோதனைகளை நடத்த முடியாது? அந்த மாநிலங்களில் எல்லாம் வருமான வரித் துறை, சிபிஅய் அல்லது கலால்துறை கோவிட் நோயால் பாதிக்கப்படு கிறதா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
· ஒவ்வொரு முறையும் தனியார் வாகனங்களில் வாக்கு இயந்திரம் கொண்டு செல்லப்படுவது குறித்து காணொலிகள் வெளி வரும்போது, ஆச்சரியப்படத்தக்க வகையில் பின்வரும் விஷயங்கள் பொதுவானவையாக உள்ளது. 1. வாகனங்கள் பொதுவாக பாஜக வேட்பாளர்கள் அல்லது அவர்களது கூட்டாளிகளுக்கு சொந்த மானவை. 2. காணொலிகள் தனித்த ஒரு சம்பவமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, பிறழ்வுகளாக நிராகரிக்கப்படுகின்றன 3. காணொலி களை அம்பலப்படுத்தியவர்கள் தோல்வி பயத்தில் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்ட பாஜக தனது ஊடக இயந்திரங்களைப் பயன் படுத்துகிறது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா ஒரு விரிவான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
- குடந்தை கருணா
3.4.2021
No comments:
Post a Comment