கருநாடக பா.ஜ.க.வில் பனிப்போர் முதல்வர் எடியூரப்பா மீது பா.ஜ.க. மேலிடம் அதிருப்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

கருநாடக பா.ஜ.க.வில் பனிப்போர் முதல்வர் எடியூரப்பா மீது பா.ஜ.க. மேலிடம் அதிருப்தி

பெங்களூரு, ஏப்.3 தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கருநாடகாவில் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சமயத்தில் கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலியின் அந்தரங்க காணொலி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தின் தொடக்கத் தில் ரமேஷ் ஜார்கிஹோலிக்கு ஆத ரவாக முதல்வர் எடியூரப்பா உள் ளிட்ட பாஜக தலைவர்கள் பேசினர். இதை கையிலெடுத்த காங்கிரஸ், பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரச்சாரம் செய்தது.

இதனால் சுதாரித்த பாஜக மேலிடம், 5 மாநில தேர்தல் நேரத்தில் ரமேஷ் ஜார்கிஹோலி மீது நட வடிக்கை எடுக்குமாறு எடியூரப்பா வுக்கு அறிவுரை வழங்கியது.

இதையடுத்து ரமேஷ் ஜார்கிஹோ லியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அவர் மீது வழக்கும்பதிவு செய்யப் பட்டது. இந்நிலையில் ரமேஷ் ஜார்கி ஹோலியை கைது செய்யக்கோரி மகளிர் காங்கிரசார் போராட்டத்தில் குதித்துள்ளதால் பாஜக மேலிடத் தலைவர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இதனிடையே கருநாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வ ரப்பா தனது துறையில் முதல்வர் எடியூரப்பா அத்துமீறி தலையிடு வதாக ஆளுநர் வாஜுபாய் வாலா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோ ருக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பட்டீல் யத் னால், எடியூரப்பாவின் மகன் விஜ யேந்திரா நிழல் முதல்வராக செயல் படுகிறார். இந்த குடும்ப ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க வில்லை. எனவே பாஜக மேலிடம் அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனால் பாஜக மேலிடத் தலைவர்கள் எடியூரப்பா மீது அதி ருப்தி அடைந்துள்ளனர். காங்கிரஸ் மாநிலத் தலைவர் சிவகுமார், பாஜக ஆட்சியை கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment