புரட்சிக்கவிஞர் பற்றிய ஆசிரியர் அய்யாவின் பேருரை மிகச் சிறப்பு!
பேரன்பு நிறை ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்!
நேற்றைய (29.4.2021) தங்களது புரட்சிக்கவிஞர் பற்றிய உரை கேட்டேன். இதுவரை நாங்கள் கேட்டிராத, ஆனால், கேட்டு உள்வாங்கவேண்டிய கவிதைகளைச் சொல்லி மிகமிக அருமையாக உரை நிகழ்த்தினீர்கள். ஒரு புத்தகமாக இப்பேருரை வெளிவந்தால் நல்லது. அதே போல் இவ்வுரை காணொலியை ‘பெரியார் வலைக்'காட்சியில் பதிவிட்டால் மீண்டும் கேட்கவும், புதிதாக கேட்டும் பயன்பெற வாய்ப்பேற்படும்.
மனமார்ந்த நன்றிகள்!
தொடர்ந்து ‘விடுதலை' படித்து வருகிறோம். இப்பெருந் தொற்றிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள தங்களின் அறிவார்ந்த செய்திகளும், அறிவுரைகளும் மிகச் சிறப்பு. இதழ்கள் வாயிலாகவும், இயக்க தோழர்கள் வாயிலாகவும் மிகப் பெருமளவில் இக்கருத்துகள் பரவி பயனளிக்கும் என்பது திண்ணம்.
அன்புடன்,
அரசு செல்லையா, அமெரிக்கா
No comments:
Post a Comment