அறிஞர் அண்ணா சிலைக்கு தீவைப்பு தளபதி மு.க.ஸ்டாலின் கடுங்கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

அறிஞர் அண்ணா சிலைக்கு தீவைப்பு தளபதி மு.க.ஸ்டாலின் கடுங்கண்டனம்

சென்னை, ஏப். 3- தி.மு..தலை வர் மு..ஸ்டாலின் தமது முக நூல் பதிவில் நேற்று (2.4.2021) குறிப்பிட்டுள்ளதாவது,

'தமிழ்நாடுஎன்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட் டிய தமிழ்த்தாயின் தவப்புதல் வர் அறிஞர் அண்ணா அவர்களின் சிலையைக் கள் ளக்குறிச்சி அருகே மாதவச் சேரியில் கொடூர எண்ணம் கொண்டோர் தீ வைத்துக்  கொளுத்தியுள்ளது கடுமை யான கண்டனத்திற்குரியது.

அமைதி தவழும் தமிழ கத்தை வன்முறைக்காடாக்க நினைக்கும் சக்திகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு ஜனநாயக ஆயுதத்தால் நிச்சயம் தண்டிப்பார்கள். அண்ணாவின் பெயரை லேபிளாகக் கொண்ட அடி மைக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவின் சிலைகள் மட்டுமின்றி, .தி. மு..வின் நிறுவனரான மக் கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலை களும் சிதைக்கப்படுகின்றன.

இத்தகைய வன்முறைப் போக்கை ஒடுக்க வக்கின்றி, எதிர்க்கட்சிகளை வக்கணை பேசிக் கொண்டிருக்கும் முத லமைச்சர் உள்ளிட்டவர்களின் போக்கு வெட்கக்கேடானது.

No comments:

Post a Comment