சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தம் - வெளியாகியுள்ள புதிய அதிர்ச்சி தகவல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தம் - வெளியாகியுள்ள புதிய அதிர்ச்சி தகவல்!

 புதுடில்லி. ஏப். 10- வி.வி.அய்.பி. ஹெலிகாப்டர்கள் வாங்கி யது தொடர்பான ஊழலில் சம்பந்தப்பட்டதாக விசாரிக் கப்பட்டு வரும் பிரபல ஆயுத வியாபாரி சுஷேன் குப்தா, சர்ச்சைக்குரிய ரபேல் விமா னங்களை வாங்கும் விவகாரத் தில், ஒரு புரோக்கராக செயல் பட்டு இதன் மூலம் 7 கோடி இந்திய ரூபாய் லஞ்சம் பெற் றுள்ளார் என்ற விபரத்தைகோப்ரா போஸ்ட்' குறிப் பிட்ட நிறுவனத்தின் நாட் குறிப்பு ஒன்றில் இருந்து எடுத்துள்ளது.

ரபேல் விமானம் வாங்கிய தில் இடைத்தரகராக செயல் பட்டு ஒரு மில்லியன் யூரோ அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7.5 கோடி லஞ்சம் பெற்றதாக செய்திகள் வெளி யானது,

 இந்த நிலையில் கோப்ரா போஸ்ட் ரபேல் ஊழல் வழக்கு தொடர்பாக விசா ரணை செய்துவரும் பிரெஞ்சுப் புலனாய்வுத்துறையின் வசம் உள்ள டஸ்ஸால்ட் நிறுவன நாட்குறிப்பு ஒன்றை பெற்றுள்ளது. அதில் ரபேல் வர்த்தகத்தில் தொடர்புடைய பிரான்ஸ் நிறுவனங்களான டஸ்ஸால்ட் ஏவியேஷன் மற்றும் அதன் துணை நிறு வன மான தேல்ஸ் ஆகியவற்றி டமிருந்து, மில்லியன் கணக்கி லான யூரோக்களை, அவர் கையூட்டாகப் பெற்றுள்ளார் என்று தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும்  குப்தா என்பவர், இந்தியப் பாதுகாப்பு அமைச் சகத்திலிருந்து ரகசியமான ஆவணங்களை சட்டவிரோத மாக பெற்றார் எனவும், அவற் றின் மூலம், பிரான்ஸ் நிறு வனங்களிடம் பேரம்பேசி, பெரியளவிலான லஞ்சம் பெற் றார் எனவும் கூறப்படுகிறது.

மோடி அரசின் ரபேல் ஒப் பந்தம் தொடர்பாக, மீடியா பார்ட் மேற்கொள்ளும் மூன் றாம் கட்ட புலனாய்வில், இந் தப் புதிய தகவல் வெளியாகி யுள்ளது.

பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரகசிய ஆவணங் களை, குப்தா பெற்றது தொடர்பாக, அமலாக்கத் துறை இன்னும் பூர்வாங்க விசாரணையைத் துவக்க வில்லை. ஏனெனில், இந்த ஆவணங்களின் மூலம்தான், பிரான்ஸ் நிறுவனங்கள், ரபேல் விமானங்களின் விலையை, முந்தைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் அதிகளவில் ஏற் றுவதற்கு துணைசெய்யப்பட் டதாக தெரிவிக்கப்படுகிறது. 2019-ஆம் ஆண்டு ரபேல் விமான பேரம் தொடர்பான ஆவணங்களை காட்டுமாறு நீதிமன்றம் மத்திய அரசிடம் கேட்ட போது அந்த ஆவ ணங்கள் அனைத்தும் பாது காப்பு அமைச்சகத்தின் அலு வலகத்தில் இருந்து திருடு போய்விட்டது என்று நீதி மன்றத்தில் கூறியது. இந்த நிலையில் அந்த ஆவணங்கள் அனைத்தும் சுஷாந்த் மோகன் குப்தா என்ற இடைத்தரகரின் கைகளுக்குச்சென்றுள்ளது இந்த விசாரணையின் மூலம் வெளிவந்துள்ளது. ஆனாலும் இது தொடர்பாக மத்திய அரசு எந்தக் கருத்தும் கூறாமல் மேற்குவங்கத் தேர் தலில் கவனம் செலுத்தி வரு கிறது.

No comments:

Post a Comment