மீண்டும் பொது முடக்க அச்சத்தால் குஜராத்திலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

மீண்டும் பொது முடக்க அச்சத்தால் குஜராத்திலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட தொழிலாளர்கள்

அகமதாபாத், ஏப். 10- குஜராத்தில் கரோனா வேகமாக பரவுவதால் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்படலாம் என்ற அச்சத்தால் அங்கு பணிபுரியும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்றின் 2ஆவது அலை தாக்கி வருகிறது. குறிப்பாக மகாராட்டிரா, குஜராத், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்காக, மகாராட்டி ராவில் திங்கள் முதல் வெள்ளி வரையில் இரவு நேரத்திலும் (8 மணி முதல் காலை 7 மணிவரை) சனி, ஞாயிற்றுக் கிழமை களில் பகல், இரவு என முழு நேரமும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட் டுள்ளது.

இதுபோல டில்லி, சத்தீஸ்கர் உள் ளிட்ட சில மாநிலங்களில் இரவு நேர பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்திலும் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத் தப்படலாம் என்ற அச்சத்தால், சூரத், அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலா ளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இதுகுறித்து மண்டல ரயில் பயணி கள் ஆலோசனைக் குழு உறுப்பினர் யோகேஷ் மிஷ்ரா கூறும்போது, “குஜ ராத்தில் கரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் பொது முடக்கம் அமல்படுத் தலாம் என உயர் நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருந்தது. அப்படி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டால் கடந்த ஆண்டைப் போலவே சொந்த ஊர் செல்ல முடி யாமல் சிக்கிக் கொள்வோமோ என்ற அச்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனால் அகமதாபாத்தில் பணி புரிந்த உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங் களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ரயில் நிலை யத்தில் குவிந்துள்ளனர். இதுபோல ரயிலுக்காக முன்பதிவு செய்து காத் திருப்போர் பட்டியலில் இருப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறதுஎன்றார்.

சூரத் சொகுசுப் பேருந்து உரிமையா ளர்கள் சங்க தலைவர் தினேஷ் அந்தன் கூறும்போது, “.பி., .பி., பீகார், ஜார்க் கண்ட் மாநில தொழிலாளர்கள் சொகுசு பேருந்துகளில் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்என்றார்.

இதுகுறித்து குஜராத் கூடுதல் தலை மைச் செயலாளர் (தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு) விபுல் மித்ரா கூறும் போது, “பொதுமுடக்கம் அமலில் இல் லாத நிலையில், ரயில்கள் இயக்கப்படு வதால் மக்கள் எந்த ஊருக்கும் சுதந் திரமாக செல்லலாம். அவர்களை தடுக்க முடியாது. அந்தவகையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறைவான எண்ணிக் கையிலேயே சொந்த ஊர் திரும்புகின்ற னர். அதேநேரம் தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதுஎன்றார்.

No comments:

Post a Comment