சிறைச்சாலை விதிகளிலும் மனுதர்மம்
“சிறைச்சாலைகளுக்கான விதிகள் இருக்கிறதே (Jail Manual) அதைப் பார்த்தால் ஒரு உண்மை தெரியும்!
சிறைக்குள் செல்லுபவர்கள், அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் அறுத்துவிட்டுத்தான் உள்ளே அனுப்புவார்கள். காரணம் அதை வைத்துக்கொண்டு உள்ளே தற்கொலை எதுவும் செய்து கொள்ளக்கூடாது என்பதால்!
ஆனால், அரைஞாண்கயிறுதான் அறுக்கப்படுகிறதே தவிர, பூணூல் போட்டிருந்தால் உள்ளே அனுமதிக்கலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது! அதேபோல், பார்ப்பனக் கைதிகள் வந்தால், அவர்களுக்குச் சிறையில் தட்டு, உடை போன்றவைகள் புதிதாகக் கொடுக்கவேண்டும் என்று விதி இருக்கிறது. இந்த விதிகள் இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கைதிகளைத் தவிர மற்றபடி சிறைக்குப் போகிறவர்கள் எல்லாம் திருட்டு, கொலை, ஒழுக்கக் கேடுகளால் தான் உள்ளே போகிறார்கள். இப்படிக் கிரிமினல் குற்றம் செய்கிறவர்களிலும் பார்ப்பான் என்றால் தனிச்சலுகையாம்!
சிறையில் உள்ளே இருக்கும் பணியாளர்கள். கூட மற்ற குற்றவாளியைப்போல் பார்ப்பனர்களிடம் நடக்கமாட்டார்கள். அங்கும் ‘சாமி’ என்று தான் கூப்பிடுவார்கள். இன்றைக்கும் சிறைச்சாலை விதிகளில் இந்த மனுதர்மம் இருந்து கொண்டிருக்கிறது.
- மயிலைக் கூட்டத்தில் (22.3.1981)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பேச்சு
No comments:
Post a Comment