சென்னை, ஏப். 10 தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டா லினை சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில், அக்கட்சி வேட்பாளர்கள் 120 பேர் நேற்று (9.4.2021) சந்தித்தனர். அப்போது தேர் தலில் தங்கள் தொகுதியில் இருக்கும் வெற்றி வாய்ப்பு குறித்து விளக்கம் அளித்தனர்.
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2ஆம் தேதி வரையிலும், மின் னணு வாக்குப்பதிவு எந்திர மய்யங்களை கவனமாக பாது காக்கவேண்டும் என்று தி.மு.க. மற்றும் அதன் கூட் டணி கட்சியினருக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில் தளபதி மு.க. ஸ்டாலினை சென்னை தேனாம்பேட்டை யில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட் பாளர்கள் 30-க்கும் மேற்பட் டோர் 8.4.2021 அன்று சந் தித்தனர். அப்போது அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. மாவட்ட செயலாளர் களும் உடன் இருந்தனர்.
தேர்தலில் தாங்கள் மேற் கொண்ட பணிகள் என்ன?, தொகுதியில் வாக்குப்பதிவு நிலவரம் என்ன?, தொகுதியில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? தேர்த லில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மய்யங்களில் முறையாக கண்காணிப்பு பணிகள் செய்யப்படுகிறதா? என்பது குறித்து தளபதி மு.க.ஸ்டாலினிடம் விளக்கம் அளித்தனர்.
மு.க.ஸ்டாலினை 2ஆவது நாளாக நேற்று, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்தில்
120-க்கும் மேற்பட்ட தி.மு.க. வேட்பாளர்கள், தங்கள் மாவட்ட செயலாளர்களு டன் சந்தித்தனர். அப்போது, தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு மற்றும் வாக்கு எண்ணும் மய்யங்கள் கண்காணிக்கும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
இன்று (சனிக்கிழமை) தொடர்ச்சியாக 3ஆவது நாளாக தளபதி மு.க.ஸ்டா லினை, தி.மு.க. வேட்பாளர் கள் சென்னையில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்திக்கின்றனர்.
No comments:
Post a Comment