தேர்தல் களத்தில்..... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

தேர்தல் களத்தில்.....

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

 மக்கள் எழுச்சியைப் பார்க்கும்போது 234 இடங்களிலும் தி.மு.. தான் வெற்றி பெறும் போடிநாயக்கனூரில் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பேச்சு 

மக்கள் எழுச்சியை பார்க்கும்போது 234 இடங்களிலும் தி.மு.. தான் வெற்றி பெறும் என்றும், .தி.மு.. ஒன்றில் கூட வெற்றி பெறாது என்றும் போடிநாயக்கனூரில் தேர்தல் பிரசாரத்தின்போது தளபதி மு..ஸ்டாலின் பேசினார்.

தி.மு.. வேட்பாளர்கள் தங்க தமிழ்ச் செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன், மகராஜன், சரவணக்குமார் ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து 31.3.2021 அன்று போடிநாயக்கனூரில் தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் பேசியதாவது:-

துணை முதல்-அமைச்சர் .பன்னீர் செல்வத்தை எல்லோரும் பெரிய தியாகி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையாக அவர் தியாகி அல்ல. பெரிய புத்திசாலி. ஏனென்றால் தோற்கப் போகின்ற .தி.மு..வுக்கு எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று சொன் னார். அரசியலில் சிலருக்குத்தான் வாய்ப்புக் கிடைக்கும். .பன்னீர்செல்வத்துக்கு ஒருமுறை அல்ல, 3 முறை முதல்-அமைச்சர் வாய்ப்புக் கிடைத்தது. அவர் அந்த வாய்ப்பைப் பயன் படுத்தி இந்தத் தொகுதிக்கு ஏதாவது செய்தாரா? ஜெயலலிதாவுக்கு உண்மையாக இருந்தாரா? பதவிக்காக தர்மயுத்தம் நடத்தினார். ஜெய லலிதா இருந்தவரை நின்று தரையைப் பார்த்து கும்பிட்டுக் கொண்டிருந்தவர். இப்போது ஜெயலலிதாவை தலைமுழுகி விட்டார்.

நாடகமாடும் .பன்னீர்செல்வம்

ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்த இவரை இந்த தேனி மாவட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? ஜெயலலிதாவுக்குத் துரோகம் செய்தவரை தேனி மாவட்டத்திலி ருந்து விரட்டவேண்டுமா? வேண்டாமா?

இந்த தொகுதியில் உள்ள எந்தப் பிரச்சினை யையும் துணை முதல்-அமைச்சர் பதவியில் இருக்கும் .பன்னீர்செல்வத்தால் தீர்க்க முடியவில்லை. மக்களை ஏமாற்ற எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து நாடகமாடும் .பன்னீர்செல்வத்துக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

கொச்சைப்படுத்த வேண்டாம்

தேர்தல் வருகிற போதெல்லாம் பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்துக்கு வந்து செல்வார். அப்படி வந்தவர், வெறும் பொய்யாக சொல்லி விட்டுச் சென்றிருக்கிறார். எப்போதெல்லாம் மோடி வருகிறாரோ, அப்போதெல்லாம் அந்த கட்சிக்கு தமிழக மக்கள் என்ன பாடம் கற்பிக் கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். ஏன் என்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே அவர்களுக்கு பூஜ்யம்தான். இந்தத் தேர்தலிலும் அவருக்கு பூஜ்யம்தான். எனவே அவர் அடிக்கடி வந்து போகட்டும். அது நமக்கு நல்லதுதான்.

நம்முடைய இளைஞர்கள் தான்

வருகிற 2ஆம் தேதி வரப் போவதாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அவரை பார்த்து .பன்னீர்செல்வம் உண்மையான ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என்று பாராட்டிப் பேசுகிறார். இவ்வளவு நாட்களாக .பன்னீர்செல்வம், தான் ஜல்லிக்கட்டு நாயகன் என்று விளம்பரம் அவரே கொடுத்துக் கொண்டிருந்தார். இப்போது ஜல்லிக்கட்டு நாயகன் மோடிதான் என்று சொல்கிறார். ஜல்லிக்கட்டு வந்ததற்குக் காரணம், நம்முடைய இளைஞர்கள்தான், அரசியல்வாதிகள் அல்ல. அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளை வாகத்தான் ஜல்லிக்கட்டு வந்தது. எனவே அப்படிப்பட்ட இளைஞர்களை .பன்னீர் செல்வம் தயவு செய்து கொச்சைப்படுத்த வேண்டாம்.

கருத்து கணிப்புகள்

கருத்து கணிப்புகள் வந்து கொண்டிருக் கின்றன. ஏற்கனவே புதிய தலைமுறையில் வந்தது. தந்தி' தொலைக்காட்சியில் வந்தது. மாலை முரசில் வந்தது. தந்தி' டி.வி.யில் 2-வது முறையாக  30.3.2021 அன்று வந்தது. ஜூனியர் விகடனில் வந்திருக்கிறது. பெரும் பாலும் எல்லாவற்றிலும் நாம் தான்(தி.மு..) வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்கள்.

யாராவது நம்மைக் குறைத்து மதிப்பிட்டுச் சொல்கிறார்களா? அது உண்மையோ, பொய் யோ, அதைப்பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை. நாம் ஆற்றுகிற பணியிலிருந்து நாம் என்றைக்கும் பின் வாங்கப்போவதில்லை. அதில் ஏமாந்து விடக்கூடாது. ஒரு .தி.மு.. வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான் இந்தத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியபோது நம்மு டைய கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று சொன்னேன்.

234 இடங்களிலும் வெற்றி

இப்போது 15 நாட்களாக சுற்றி, சுற்றி பயணத்தை நடத்தி மக்களை பார்க்கிறேன். மக்கள் எழுச்சியை பார்க்கிறபோது 200 அல்ல, 234 இடங்களிலும் தி.மு.. தான் வெற்றி பெறப் போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. .தி.மு.. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறக் கூடாது என்று அதீத ஆசையால் சொல்வதாக நினைக்கவேண்டாம். ஒரு .தி.மு.. வெற்றி பெற்றாலும் அவர் .தி.மு.. சட்டமன்ற உறுப் பினராக அல்லாமல் பா... எம்.எல்..வாக தான் இருப்பார். இந்த தொகுதியில் தேர்ந் தெடுக்கப்பட்ட .பன்னீர்செல்வத்தின் மகன் .தி.மு..வின் மக்களவை உறுப்பினராக அல்லாமல், பா... எம்.பி.யாக இருக்கிறார். அவர் லெட்டர் பேடில்' .தி.மு.. தலைவர் படம் அல்லாமல் மோடியின் படம்தான் இருக்கிறது. அப்படி ஒரு அடிமையாக இருக்கிறார்கள். அதனால் ஒரு எம்.எல்.. கூட .தி.மு.. சார்பில் வந்துவிடக்கூடாது என்பதுதான் என்னுடைய பணிவான வேண்டுகோள்.

இன்னும் 4 நாட்கள் தான் ஆட்டம்....

நேற்றைக்கு (30.3.2021) தந்தி' தொலைக் காட்சியில் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக் கிறார்கள். அதில் தி.மு..தான் பெரும்பான்மை யான இடங்களில் வெற்றி பெறப்போகிறது என்று புள்ளி விவரத்தோடு சொல்லியிருக் கிறார்கள். உடனே அந்த தந்தி' தொலைக் காட்சியை அவர்கள் மிரட்டி இருக்கிறார்கள். ஏற்கெனவே மாலை முரசு' தொலைக்காட்சியை மிரட்டி இருக்கிறார்கள். அவர்களை மிரட்டியது மட்டுமல்லாமல் அரசு கேபிள் டி.வி.யில், மாலை முரசின் ஒளிபரப்பை நிறுத்தி இருப்பதாக செய்தி கிடைத்திருக்கிறது. தந்தி' தொலைக் காட்சியை ஒளிபரப்பு வரிசையில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்கள்.

இன்னும் 4 நாட்கள்தான் உங்கள் ஆட்டம். எனவே உங்கள் ஆட்டம் எல்லாம் முடியப் போகிறது. நம்முடைய சுயமரியாதை காப் பாற்றப்படவேண்டும். நாம் இழந்திருக்கும் உரிமையை மீட்கவேண்டும். எனவே நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியன் சின்னத்தை ஆதரித்து மிகப்பெரிய வெற்றியை தேடித்தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமூக நீதி, பெண்கள் விடுதலைக்காக போராடிய மாநிலம் தமிழகம் பெண்கள் மீது அக்கறை இருந்தால் 33 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்ற தயாரா?

பிரதமர் மோடிக்கு டி.ராஜா கேள்வி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா திருப்பூரில் செய்தியாளர்களுக்கு நேற்று (31.3.2021) பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெறுகிற தேர்தல் நாடுமுழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆட்சியில் இருக்கிற .தி.மு.., பா.ஜனதா கட்சி தேர்தலில் படுதோல்வியை சந்திக்க இருக் கிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணியின் படுதோல்வி, இந்திய அளவில் மத்திய ஆட்சி யின் வீழ்ச்சியின் தொடக்கமாக பார்க்கப் படுகிறது. அதனால் தான் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்கள் தமிழகத்துக்கு படையெடுத்து வருகிறார்கள். அவர்களிடம் நம்பிக்கை என்பதற்கு பதிலாக விரக்தி தலைதூக்கி உள்ளது.

தமிழகத்தில் ஏற்படுகிற தோல்வி மத்தியில் அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்த இருக் கிறது. தி.மு.. தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் மகத்தான வெற்றியை அளிக்க போகிறார்கள். .தி.மு..வின் அதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்களே அரசியல் கட்சிகளுக்கு புரிதலை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.. அணி மகத்தான வெற்றி பெறும்.

பிரதமர் மோடி தான் செல்லும் இடங்களில் இந்தியாவின் வளர்ச்சி பற்றி பேசுகிறார். மோடி பிரதமர் ஆனபிறகு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெருமளவுக்கு வீழ்ச்சி யடைந்துள்ளது. 

.தி.மு.. அரசு மாநில உரிமைகளை, நலன்களை காப்பாற்றுவதற்கு தவறிவிட்டது. மத்திய அரசின் நிபந்தனை களுக்கு உட்பட்ட அரசாக தமிழக அரசு உள்ளது. 

தி.மு..-காங்கிரஸ் கூட்டணி, பெண்களை அவமதிக்கிறது என்று கூறும் பிரதமர் மோடி யின் பேச்சை ஏற்க முடியாது. அது கண்டனத் தோடு நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று. பெண் களுக்கான சமூகநீதி, பெண்கள் விடுதலைக்காக போராடிய மாநிலம் தமிழகம். மோடிக்கு பெண்கள் குறித்து அக்கறை இருக்குமென்றால் 33 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று தொடர்ந்து இடதுசாரிகள் பல்வேறு மகளிர் இயக்கங்கள் போராடி வருகிறது. நாடாளுமன்றத் தில் மக்களவையில் பா.ஜனதாவுக்கு மிகப் பெரிய எண்ணிக்கையில் எம்.பி.க்கள் இருக் கிறார்கள். இதைப்பயன்படுத்தி தொழிலாளர் விரோத, விவசாய விரோத சட்டங்களை உருவாக்குகிறார்கள். பெண் களுக்கு ஆதர வான இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்று வதற்கு தயாரா?. இதை ஏன் மோடி பேச மறுக்கிறார்.

பெண்கள் சமத்துவத்துக்காக, பெண்கள் உரிமைக்காக நிற்பவர் போல் தமிழகத்தில் மோடி பாசாங்கு காட்டக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment