தஞ்சை பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தைபெரியார் சிலைக்கு வழக்குரைஞர் சி.அமர்சிங் மாலை அணிவித்தார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி (29.4.2021) அவரது படத்திற்கு கோபு.பழனிவேல் மாலை அணிவித்து மகிழ்ந்தார்.
குமரி மாவட்ட கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாளான 29.4.2021 அன்று நாகர் கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் உள்ள அவருடைய படத்திற்கு மாவட்டகழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கழக துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா. இராஜேஷ், மாநகர துணைத் தலைவர் கவிஞர் செய்க் முகமது, தோழர் சியாமளா, பெருமாள் அந்தோணி ராஜ் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment