சென்னை, ஏப். 10- குழந்தை களுக்கான பல் பாதுகாப்பு மருத்துவ துறையில் (Preventive Pediatric Dentistry) நாட் டின் முதல் பல் மருத்துவ மனையை மருத்துவர் ஷிஃபா சம்சுதீன் 2012இல் கோவை யில் தொடங்கினார்.
தற்போது நாட்டிலேயே முதன்முறையாக 3டி ஸ்கேனிங் வசதியுடன் கூடிய குழந்தைகளுக்கான பல் மருத் துவமனை யாக உருவெடுத்து உள்ளது. இதன் கிளையாக சென்னை மயிலாப்பூர் டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலையில் குழந்தைகளுக் கான பல் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு சிகிச்சை மய்யம் நேற்று (9.4.2021) மாலை தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாக்டர் ஷிஃபா சம்சுதீன், டாக்டர் சிறீலட்சுமி ஆகியோர் கூறியிருப்பதாவது: இம்மருத்துவ சிகிச்சை மய்யத்தில் குழந் தைகள் விரும்பும் வகையில் 4000 சதுரடி பரப்பில் கப்பல் வடிவில் சாகச உணர்வை தரும் வகையில் சிகிச்சை மய்யம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ‘வீ லிட்டில்'(We Little) பல் மருத்துவமனையில் ஒரு ஒளிப்படத்தைக் கிளிக் செய்யும் நேரத்திலேயே 3டி ஸ்கேனிங் வசதியுடன் iTero (USA) தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
குழந்தைகள் பால் அருந்து வதில் சவால், நாக்கு ஒட்டி யிருக்கும் நிலைக்கான பிரிவு, பச்சிளங் குழந்தைகளுக்கான உறக்கம் தொடர்பான பிரச் சிவீபீகள், வலியில்லா பல் மருத்துவம், Myoline இயற்கையான பல் வரிசை அமைத் தல், சிகிச்சையின்போது வலி மேலாண்மை, லேசர் டெண் டிஸ்ட், குழந்தைகளுக்கான காஸ்மெடிக் பல் சிகிச்சை என ஒட்டு மொத்த, செயல் பாடுகளுக்கான பல் மருத்துவ கிசிச்சைகள் அளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment