நடத்தை விதிகளை மீறி அசாமில் பா.ஜ.க. விளம்பரம் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 2, 2021

நடத்தை விதிகளை மீறி அசாமில் பா.ஜ.க. விளம்பரம் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்

கவுகாத்தி, ஏப். 2- ‘அசாமின் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜகதான்வெற்றி பெறும்என்று தேர்தல் விதிகளை மீறி விளம்பரங்கள் வெளியிடப் பட்டு இருப்பதாக, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

அசாமில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமையன்று (27.3.2021) தேர்தல் நடை பெற்றது. 

நேற்று (1.4.2021) இரண் டாம் கட்டமாக 39 தொகுதி களுக்கு  தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், அனைத் துத்  தொகுதிகளிலும் பா... தான் வெற்றிபெறும் என நாளிதழ் களில் விளம்ப ரங்கள் வெளியிட்டது, சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. முதற்கட்ட வாக்குப் பதிவு துவங்கிய மார்ச் 27 காலை7 மணிமுதல் மூன்றாம் கட்டத் தேர்தல் முடிவடையும் ஏப் ரல்29 இரவு 7.30 மணி வரை எந்தவித கணிப்புகளையும் வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம்ஏற்கெனவே உத்தரவிட்டுள்ள சூழலில், 126 தொகுதிகளிலும் பாஜகதான் வெற்றிபெறும் என்று விளம்பரம் வெளியிட் டது தேர் தல் விதிமுறைகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அசாம் முதல்வர் சர்பானந்த சோனோ வால், பாஜக தேசியத் தலை வர் ஜெ.பி. நட்டா, மாநிலத் தலைவர் ரஞ்சித் குமார் தாஸ், 8 நாளிதழ்கள் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீஸ்பூர் காவல்நிலையம், அசாம் தலைமைத்தேர்தல் அதிகாரி அலுவலகம், தேர் தல் ஆணையம் ஆகியவற்றி டம் அசாம் மாநில காங்கிரஸ் சட்டப் பிரிவின் தலைவர் நீரன் போரா புகார் அளித்து உள்ளார்.

இரண்டாம், மூன் றாம் கட்டத் தேர்தலில் மக்க ளின் மனதை மாற்ற பாஜக திட்ட மிட்டு செயல்பட்டு உள்ளதாக போரா குற்றம் சாட்டி

யுள்ளார்.

No comments:

Post a Comment