பிரேசிலியா, ஏப். 1- பிரேசில் அமைச்சரவையில் முக்கிய மான 6 துறைகளுக்கு அதிபர் ஜெயீர் போல்சனாரோ புதிய அமைச்சர்களை நியமித்து உள்ளார்.
உலக அளவில் கரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் 2ஆவது இடத்தில் உள்ளது. அங்கு 1 கோடியே 20 லட் சத்துக்கும் அதிகமானோரை வைரஸ் தாக்கிய நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிபர் ஜெயீர் போல்சனாரோ தலை மையிலான அரசு கரோனா வைரசை முறையாக கையாள வில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனை நிரூபிக்கும் விதமாக கரோனா பரவத் தொடங்கியதில் இருந்து இப்போது வரை 4 முறை சுகாதாரத்துறை அமைச் சர் மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச் சராக இருந்து வந்த எர் னஸ்டோ அராஜுவோ இந் தியா, சீனா மற்றும் அமெரிக் காவுடனான உறவுகளை மோசமாக கையாண்டதால் அந்த நாடுகளிடம் இருந்து போதிய அளவு கரோனா தடுப்பூசிகளை பெற முடியா மல் போனது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனைத்தொடர்ந்து அவர் தனது பதவியிலிருந்து விலகி னார். இதையடுத்து அமைச்சர வையில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென கூட்டணி கட்சிகள் அதிபர் ஜெயீர் போல்சனாரோவுக்கு அழுத் தம் கொடுத்தன. அதன்பேரில் பதவிக்கு வந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக அதிபர் ஜெயீர் போல்சனாரோ மிகப் பெரிய அளவில் தனது அமைச் சரவையை மாற்றியமைத்துள் ளார். வெளியுறவு, ராணுவம், உள்நாட்டு பாதுகாப்பு மற் றும் நீதி உள்பட முக்கியமான 6 துறைகளுக்கு அவர் புதிய அமைச்சர்களை நியமித்துள் ளார்.
No comments:
Post a Comment