ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

என்.டி.ராமராவால் மாநில சுயமரியாதையைக் காப்பாற்ற துவக்கப்பட்ட தெலுகு தேசம் கட்சியை, பாஜகவுடன் இணைத்திட தற்போதைய தெலுகு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடு முடிவெடுத்திருப்பதாக செய்தி.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து அறிக்கை அளித்திட அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் அளித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· கோவையில் தேர்தல் பரப்புரைக்கு வருகை வந்த .பி.முதல்வர்  யோகி ஆதித்யநாத்தை வரவேற்பதற்கான ஊர்வலமாக மோட்டார் சைக்கிள்களில் வந்த பாஜகவினர், கோவை நகரின் கடைகளில் கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது.

தி ஹிந்து:

·     இந்தியாவில் "ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சியை" நிறுவ பாஜக விரும்புகிறது, பாஜக அல்லாத கட்சிகள் தங்கள் அரசமைப்பு உரிமைகளையும் சுதந்திரங்களையும் பயன்படுத்துவதை தடுத்திட பாஜக விரும்புகிறது. இது மாநில அரசாங்கங்களின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்து அவற்றை வெறும் நகராட்சிகளாக தரமிறக்க விரும்புகிறது. இது இந்தியாவில் ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சியை நிறுவ விரும்புகிறது. ஒன்றுபட்ட மற்றும் பயனுள்ள போராட்டத்தின் தேவை உள்ளது, ஒரு செயல் திட்டத்தை உருவாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா காங்கிரஸ், திமுக உள்ளிட்ட அனைத்து 14 எதிர்க்கட்சிகளுக்கும் கடிதத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

·     உத்தரபிரதேசத்தில் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் எதுவும் பேசவில்லை என்று கேள்வி எழுப்பிய திமுக தலைவர் மு..ஸ்டாலின் திமுகவை விமர்சிக்க பாஜகவிற்குத் தகுதி இல்லை என்று கூறினார்.

தி டெலிகிராப்:

·     மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா, மே மாதத்தில் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்திட முடிவு செய்துள்ளது.

·     மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 15 சதவீத இடங் களை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்குவதற்கான ஆணையை ஒடிசா அரசு வெளியிட்டது.

- குடந்தை கருணா

1.4.2021

No comments:

Post a Comment