- தி.மு.க. எம்.பி.கனிமொழி
நத்தம், ஏப்.2 தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் முதல்வராகும் காலம் நெருங்கி வருகிறது என்று திமுக எம்.பி.கனிமொழி கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஏ. ஆண்டிஅம்பலத்தை ஆதரித்து நத்தம் பேருந்துநிலையம் அருகே திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வராகும் காலம் நெருங்கி வருகிறது. தமிழகத்தில் 25 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இவர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும் முதற்கட்டமாக அரசு காலி பணியிடங்களில் வேலைவாய்ப்பு வழங்கப் படும்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத் திற்கு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கேஸ், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் அனைத்து அரசு நகரப் பேருந்துகளிலும் பெண்கள் அனைவருக்கும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும்.
ஜூன் 3ஆம்தேதி கலைஞரின் பிறந்தநாளன்று கரோனா நிவாரண நிதி ரூ4ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment