சென்னை, ஏப்.30 தமிழகத்தில் கரோனா 2ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. கல்வித் துறையை பொறுத்தவரை, பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு வீட்டுக் கல்வி திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மே 1ஆம் தேதி முதல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத்தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான தேதி அறிவிக்கும் வரை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும், மற்ற வகுப்பு மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலமாக பயிற்சிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Friday, April 30, 2021
ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வரத் தேவையில்லை: கல்வித் துறை அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment