செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 2, 2021

செய்தியும், சிந்தனையும்....!

வீதிமன்றத்தின்  வீறுகொள் சக்தி!

*           வேளாண் சட்டங்கள் குறித்த அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்.

>>           இதன் கூடவே - மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திட விவசாயிகள் பேரணி என்ற செய்தி - நீதிமன்றத்தையும் கடந்த பெரும் சக்தி வீதிமன்றம்.

தேர்தல் படுத்தும்பாடு!

*           சமையல் எரிவாயு உருளை விலை ரூ.10 குறைப்பு.

>>           ஒட்டகத்தின் முதுகில் இருந்து அதன் கண்ணில்படும்படி ஒரு சில துண்டு சுமையை இறக்குவது போன்றபாவ்லா!'

தேர்தல் சூடு

*           21 மாவட்டங்களில் வெப்ப நிலை 100 டிகிரியைத் தாண்டியது; அனல் காற்று ஈரோட்டில் 110 டிகிரி

>>           ஈரோடு'தானே காலத்தின் அறி குறி!

கையறு நிலை

*           பொள்ளாச்சி சம்பவம் கூடத் தெரியாமல் பிரதமர் மோடி பேசுகிறார்.

- தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின்           

>>           வேறு சரக்கு இல்லையே - வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றாரு.

மதம் படுத்தும்பாடு!

*           கரோனாவால் உயிர் இழந்த டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் உடலைத் தோண்டி எடுத்து கிறித்துவக் கல்லறையில் மத சம்பிரதாயப்படி அடக்கம் செய்யலாம்.

- உயர்நீதிமன்றம் உத்தரவு

>>           செத்தாலும் விடாதோ மதம்?.

பேசுவது .பி. முதலமைச்சர் என்பதுதான் வேதனை!

*           தி.மு.. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்கள் பாதுகாப்பு கேலிக்கூத்தாகி விடும்.

- .பி. முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்

>>           பாலியல் வன்கொடுமையில் இந்தியா விலேயே முதல் இடத்தில் இருக்கும் .பி.யின் முதலமைச்சரா இப்படிக் கூறுவது?.

No comments:

Post a Comment