மின்சாரம்
உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத், மார்ச் 31-ஆம் தேதி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப் போது, புலியகுளம் பகுதியில் யோகி ஆதித்ய நாத் இரு சக்கர வாகன பேரணியில் பங் கேற்றார். புலிய குளத்தில் இருந்து ராஜ வீதி வரை இவர் பேரணியில் பங்கேற்றார்.
இதை தொடர்ந்து நகரில் காவல் துறை யினர் குவிக்கப்பட்டனர். இஸ்லாமி யர்கள் சிலர், ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் வீதி, பெரிய கடை வீதிகளில் கடைகளை மூடினர். சில இடங் களில் காவல்துறையினரே பாதுகாப்பு கார ணங்களுக்காக கடைகளை கட்டாயப்படுத்தி மூட வைத்தனர். சில மணிநேரத்தில், சாமியார் ஆதித்யநாத் பேரணி, சுங்கம், அரசு மருத் துவமனை வழியாக டவுன்ஹால் வந்தபோது பேரணியில் பங்கேற்றவர்கள் முழக்கமி ட னர்.
அந்த நேரத்தில் இஸ்லாமியர்களின் வணிகத்தலங்கள் உள்ள பகுதியில் சென்ற போது இந்துத்துவா ரவுடித்தனத்திற்கே உரித் தானே இஸ்லாமிய வெறுப்பு முழக் கங்களை எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். அங்கே இருந்த இஸ்லாமியர்களை கடைகளை அடைக்கக்கூறி பாஜகவினர் தக ராறு செய்தனர்.
அப்போது பேரணியில் ஒருவர் கல்லை எடுத்து செருப்புக் கடைக்குள் வீசினார். கையில் மற்றொரு செங்கல்லை எடுத்து மீண்டும் வீச முயன்றார். கல் வீச்சால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கல் வீச்சு காணொலி காட்சி, சமூக வலை தளங்களில் வைரலானது. இதனால் இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள மார்வாடிகள் வைத்திருக்கும் ஹார்டுவேர் கடைகள், வட்டிக்கடைகள் எல்லாம் எப் போதும் போல் திறந்திருந்தன. அவர் கள் கடைகளில் இருந்து இந்துத்துவ அமைப்பினர் உணவுப் பொருட்களையும், தண்ணீர் பாட் டில்களையும் விநியோகம் செய்தனர்.
இருசக்கர வாகனங்களில் வந்த பெரும்பாலானோர் ஹிந்திக்காரர்களா கவும், புதிதாக தமிழ் கற்றவர்கள் போல், "இம்ய மேதல் கும்ரி வரே ஒரே ஹிந்து" என்று கொச் சையான தமிழில் கூவிக் கொண்டு திரிந்தனர். இடை இடையே ஜெய் சிறீராம் என்று கூவிக் கொண்டு கைகளில் கொண்டுவந்த கொடியின் கம்புகளை காட்டி சாலையில் போவோர் வரு வோர்களை மிரட்டி அவர்களையும் கூவச் சொல்லி மிரட்டும் நிகழ்வுகளும் நடந்தன. இவை அனைத்தும் காணொலி களாக சமூகவலைதளங்களில் வலம் வந்து பாஜக என்றாலே வன்முறைக்கான ஒரு அமைப்பு என்பதை அவர்களே ஒப்புகொண்டனர்.
இதில் என்ன கொடுமை என்றால், ஊர்வ லத்திற்குக் காவல்துறை அனுமதி கிடையாது என்பதுதான். கோவையில் இது ஒன்றும் புதிதல்ல.
இதற்கு முன்பு கோவையில் செப்டம்பர் 22, 2016 அன்று இந்து முன்னணியைச் சேர்ந்த சசிக்குமார் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்து முன்னணி நடத்திய கலவரம் சாதாரண மானதல்ல.
சசிக்குமார் என்பவர் ரியல் எஸ்டேட் வசூல் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்யக் கூடிய ஓர் ஆசாமி. அதே போல விநாயகர் சிலைகள் வைப்பது, அதற்கான மிரட்டல் வசூல்களை ஒழுங்குபடுத்துவது என்பது போன்ற ‘தொழில்களை’யும் செய்து வந்த வர். சசிக்குமார் அவருடைய வீட்டினருகே கொல்லப்பட்ட பின்பு, உடலை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றவுடனே அங்கே இந்துமதவெறிக் கும்பல் அணிதிரட்டப்படு கிறது.
முதலில் சசிக்குமார் மரணத்தை உறுதி செய்த மருத்துவமனை மீது கல் வீசி தாக்கு கிறார்கள். பின்னர் உடல் அரசு மருத்துவமனை
உடற் கூறாய்வுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்து முன்னணியின் பொதுச்செயலாளர் செப்டம்பர் 23, 2016 தமிழகம் தழுவிய பந்த் என அறிவிக்கிறார். கொலைகாரர்களை காவல் துறை கைது செய்யாவிட்டால் தமிழ் நாடு குஜராத்தாக மாறும் என தொலைக்காட்சி பேட்டியில் பகிரங்க மிரட்டல் விடுக்கிறார். அங்கேயே நூற்றுக்கணக்கானோர் திரள் கின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களி லிருந்து திரட்டப் பட்டு குவிக்கப்படுகின்றனர். கொன்றது முஸ்லீம்கள் தான் என்ற தகவல் எந்த ஆதாரமுமின்றி பரப்பப்படுகிறது. அந்த வதந்தியை வைத்து கும்பல் சேர்க்கப்படு கிறது.
மறுநாள் காலை வழக்கம் போல கடை களை திறந்தவர்களிடம் வண்டிகளில் கும்பல் கும்பலாக பகுதிகளுக்கு சென்று,
இன்று பந்த் திறக்கக் கூடாது என மிரட் டியிருக்கிறார்கள். மீறி பேசியவர்களின் கடைகளை உடைத் திருக்கிறார்கள். ஓடிக் கொண்டிருக்கும் பேருந்துகளை நடு சாலையில் நிறுத்தி கண்ணாடியை உடைத்து செயற்கையான பதற்றத்தை அந்த பகுதியில் உருவாக்கி கடைய டைப்பை நடத்தியிருக்கிறார்கள். இவ்வன் முறை கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மூன்று மாவட்டங்களிலும், அதிலும் குறிப்பாக கோவையிலும், திருப்பூரிலும் முழு வீச்சில் அமலாகியிருக்கிறது.
திருப்பூரில் கல் வீச்சால் பதறிப் போய் இறங்கிய ஒரு பெண்ணின் மீது பேருந்து சக்கரம் ஏறி கால் முறிந்து பின்னர் மரண மடைந்திருக்கிறார். ஏராளமான அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கி யிருக் கிறார்கள்.
முன்னிரவில் நடந்த கொலை சம்பவம் குறித்து அறியாமல் இயல்பு வாழ்க்கையை துவங்கிய இரு மாவட்டங்களையும் காலை 9 மணிக்குள் முடக்கி முற்பகல் திட்டத்தை முடித்துவிட்டு அனைவரும் அரசு மருத்துவ மனைக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்கள்.
உடற்கூறாய்வு முடிவடையும் போதே கிட்டத்தட்ட கோவையின் முக்கிய பகுதி களில் துவங்கி மொத்த மாவட்டத்தின் இயக்கமும் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அப்போது வரை காவல்துறை வைத்திருக்கும் எந்த சிறப்புப் படையும் மருத்துவமனைக்கு வரவில்லை. கொடி அணிவகுப்பு போன்ற முன்னேற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை.
உடலை ஊர்வலமாக கொண்டு போகப் போகிறார்கள் என்று அறிவிப்பு வந்ததும், அதற்கு 18 கிலோமீட்டர் சுற்றி துடியலூர் மின் மயானம் செல்ல காவல் துறை அனுமதி கொடுத்தது. உடல் பிணவறையை விட்டு வெளியே வரும் முன்னரே, காவிக் கும்பல் அருகிலிருக்கும் இஸ்லாமியர் பகுதியான கோட்டை மேட்டுக்கு சென்று கடைகளை அடைக்க சொல்லி மிரட்ட அவர்கள் மறுக்க பதற்றம் கூடிய நிலையிலும் அங்கேயே நின்று கொண்டிருந்த காவல்துறை
இந்து முன்னணி கும்பலைத் தடுக்கக் கூட முனைய வில்லை. 1997இல், இதே கோவையில் இதே உக்கடத்தில் இந்துக்க ளும் முஸ்லீம்களும் மோதிக் கொண்டி ருக்கும் போதும் காவல் துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வரலாறு.
சிறுபான்மையினர் வாழும் பகுதியின் வழியாகவே உடலைக் கொண்டு செல் லவும் அனுமதித்திருக்கிறார்கள். கோவை, திருப்பூர் பகுதிகளிலிருந்து திரட்டப்பட்ட சுமார் 1500 பேருடன் உடலை எடுத்துக் கொண்டு பேரணியாகக் கிளம்பினார்கள். காவிகளுக்கு வந்த வழிகாட்டுதல், “முடிந்த வரை தாமதப் படுத்தி கொண்டு போக வேண்டும்; போகும் வழியில் எந்த கடை திறந்திருந்தாலும் அடிக்க வேண் டும்; பள்ளி வாசல் மீதும் சர்ச் மீதும் கண்டிப்பாக தாக்குதல் நடத்த வேண்டும்; அங்கு முன்னால் நிற்கும் ஆட்களை அடித்தாலும் தப்பில்லை; இஸ்லாமியர் கள் கடைகளை கண்டிப்பாக அடிக்க வேண்டும்; இறுதி இலக்கான துடியலூரை துவம்சம் செய்ய வேண்டும்” என்று திட்டமிடப்படுகிறது. இது ஒரு காவியின் வாக்குமூலம்.
ஒரு முழு நாளையும் திட்டமிட்டு பயன் படுத்தி ஒரு கலவரத்தை நடத்தி முடித்துள்ள னர். உடல் அரசு மருத்துவமனையில் இருக் கையிலேயே இந்த இந்து முன்னணி கும்பலை பற்றி ஓரளவு அறிந்த கோவை மக்கள் பலர் காலையிலேயே கலவர நெடியை உணர்ந்து விட்டார்கள். அறிவிப்பில்லா மல் கலவரங்கள் அமலுக்கு வருவதில்லை. ஆனால், காவல் துறை இதை அணுகிய விதம் என்பது மிக மிக ஆபத்தான போக் கிற்கான அறிகுறி. மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறை சங்கி களின் கொள்ளை கலவர கும்பலுக்கு பாது காப்பு அளிக்கிறது
1997 கலவரத்தில் கெம்பட்டி காலனி, குனியமுத்தூர், உக்கடம் சுற்றுவட்டார பகுதி களை சேர்ந்த அருந்ததிய சமூ கத்தை சேர்ந்த கணிசமான மக்களை காலாட்படையாக பயன்படுத்தி கலவரத்தை நடத்தினர். இம் முறை கொஞ்சம் நகர்ந்து சிவானந்தா காலனி, கவுண்டம் பாளையம், துடியலூர் என்று வந்து விட்டார்கள்.
இந்த தாக்குதலில் விநாயகர் ஊர்வ லத்திற்கு காசு கொடுத்த ஹிந்து வியாபா ரிகளும் கூட தாக்கப்பட்டிருக்கிறார்கள். இனி கோவை வர்த்தகர்கள் அனைவரும் இந்த சூறையாடலுக்கு பயந்து மாமுல் கொடுத்தே ஆக வேண்டிய சூழ்நிலை.
இது இவர்களின் கலாச்சாரம், உ.பி. முதல் அமைச்சர் ஆதித்யநாத் வருகை யின் போது நடத்தப்பட்ட வன்முறையால், கொஞ்ச நஞ்சம் பா.ஜ.க.வுக்குக் கிடைக்க இருந்த வாக்கு களும் கிடைக்காமல் போவது தான் மிச்சம்.
அஇஅதிமுக போட்டியிடும் தொகுதி களிலும் அச்சம் ஏற்பட்டு விட்டது. பா.ஜ. க.வி டமிருந்து விலகி நிற்க அஇஅதிமுக வினர் முடிவு செய்துவிட்டதாகவே தெரி கிறது.
No comments:
Post a Comment