கருநாடக அமைச்சர்கள் முறையீடு
பாலியல் வன்கொடுமை, அதைத் தொடர்ந்து அதை படமாக பிடித்த விவகாரம் தொடர்பாக கருநாடக பாஜக அரசின் நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹேலி பதவி விலகினார்.
இதனை அடுத்து தங்களைக் குறித்தும் இது தொடர்பாக எதையும் எழுதவேண் டாம் என்று ஊடகங்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென, அம்மாநிலத்தின் 6 அமைச் சர்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
கருநாடகாவில் எடியூரப்பா தலைமை யிலான பாஜக அரசு ஆட்சி நடைபெறு கிறது. எடியூரப்பா அரசு பதவியேற்றது முதலே, மாநில அமைச்சர்கள் குறித்து பல சர்ச்சைகள் வட்டமிடுகின்றன. எடியூ ரப்பா மீது கூட பாலியல்வன்கொடுமை குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அம்மாநில நீர்ப்பாச னத் துறை அமைச்சராகவுள்ள ரமேஷ் ஜர்கிஹேலி தெடர்பான ஆபாச காணொலி வெளியாகி அதிர்ச்சியடையச் செய்தது, இதனை அடுத்து அவர் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இதனையடுத்து, அம்மாநிலத்தின் எஸ்.டி.சேம சேகர், ஷிவராம் கெப்பார், பி.சி.பட்டீல், டாக்டர்.சுதாகர், நாராயண கவுடா மற்றும் பைரட்டி பசவராஜூ ஆகிய 6 அமைச்சர்கள்
நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
அதாவது, தாங்கள் தெடர்பான எந்த காணொலியையோ அல்லது உள்ளடக் கமோ, அச்சு ஊடகங்களிலே அல்லது வேறெந்த வகையிலோ ஒலி-ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு தடைவிதிக்க வேண் டுமென நீதிமன்றத்தை அணுகியுள்ளனர் அமைச்சர்கள். மாநில அமைச்சர்களின் இந்த செயல், அரசியலில் மேலும் பர பரப்பை அதிகரித்துள்ளது.
கருநாடக அரசியலில் ஆபாச காணொலி விவகாரம் பூதாகரமானது முதல் முறையாக நடக்கும் நிகழ்வு அல்ல, இதற்கு முன்னதாகவே பல காணொலி வெளியாகி பலரும் பதவி விலகி இருக்கின்றனர்.
ரேணுகாச்சார்யா:
கருநாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலராக இருந்தவர் ரேணு காச்சார்யா, 2008 - 2013 வரை கலால் துறை அமைச்சராக இருந்துள்ளார். செவி லியர் ஜெயலட்சுமி என்பவர் ரேணுகாச் சார்யாவுடன் இருந்த ஒளிப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ரேணுகாச்சார்யா மீது குற்றம் சுமத்தினார். இதன் காரணமாக ரேணுகாச்சார்யா தனது பதவியிலிருந்து விலகினார்.
ஹர்த்தலு ஹலப்பா:
பாஜகவைச் சேர்ந்த ஹர்த்தலு ஹலப்பா, 2009இல் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது தன்னுடைய நண்பரின் மனைவியை பாலியல் வன் கொடுமைசெய்து அதைக் காட்சிப்பதி வாக்கி பாலியல் இணையதளம் ஒன்றில் வெளியிடுவதாக மிரட்டினார். இந்த நிலையில் அந்த காணொலி பாலியல் இணையதளத்தில் வெளியாகிவிட்டது. இதன் காரணமாக அவர் பதவி விலகினார்.
ரகுபதி பாட்:
2008 முதல் 2013ஆம் ஆண்டு வரை பாஜக சார்பில் உடுப்பி தொகுதி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் ரகுபதி பாட். தன்னிடம் உதவிகேட்டுவந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். அந்தக்காணொலி கருநாடக மாநில தொலைக்காட்சிகளில் வெளியா னது.
இதன் காரணமாக அந்த தேர்தலில் அவர் போட்டியிடாமல் தவிர்த்தார்.
லட்சுமன் சவாடி:
2012ஆம் ஆண்டு கருநாடக சட்ட மன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது காணொலிகளை பார்த்ததாக லட்சுமன் சவாடி, கிருஷ்ண பாலேமர் மற்றும் சி.சி. பாட்டில் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அர்விந்த் லிம்பவேளி:
பாஜகவைச் சேர்ந்த மகாதேவபுரா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அர்விந்த் லிம்பவேளி தொடர்பான ஆபாச காணொலி ஒன்று 2019ஆம் ஆண்டு ஜூலையில் வெளியானது. அந்த காணொலியில் அவர் இல்லை என்று கருநாடகா அரசு காவல்துறை விசாரணை செய்து அறிக்கை வெளியிட்டது, ஆனால்
இந்தக் காணொலியை புனேவில் உள்ள தடயவியல் சோதனை நிலையத் திற்கு அனுப்பக்கோரி காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் முறை யிட்டனர், ஆனால் எடியூரப்பா அவர்க ளின் கோரிக்கையை ஏற்க மறுத்து
குற்றச் சாட்டுக் கூறிய காங்கிரஸ் உறுப்பினர் களை பேரவைத் தலைவர் மூலம் வெளியே அனுப்பினார்.
இவர்கள் அனைவருமே தங்களின் பழைய காணொலிகளை மீண்டும் ஊட கங்கள் ரமேஷ், ஜர்கி ஹோலி காணொலி யோடு தொடர்பு படுத்தி வெளியிடக் கூடாது என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment