புதுடில்லி, ஏப்.10 நாடு முழுவ தும் முழு ஊரடங்கு பிறப்பிக் கப்படலாம் என்ற பீதியில் ரயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த பீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வகை யில் ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா நேற்று (9.4.2021) பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
ரயில் சேவையை குறைக் கவோ, நிறுத்தவோ நாங்கள் திட்டமிடவில்லை. தேவைக் கேற்ப ரயில் கள் இயக்கப்படும். எனவே, பீதி அடையத் தேவையில்லை. கூட்ட நெரி சல் காரணமாக ரயில்கள் அதி கம் தேவைப்பட்டால், குறு கிய இடைவெளியில் கூடுத லாக ரயில்களை இயக்க முடி யும். எனவே பயப்பட வேண்டாம்.
கோடை காலங்களில் வழக்கமாக ரயில்களில் கூட் டம் அதிகமாகவே இருக்கும். நெரிசலை தவிர்க்க கூடுதலாக ரயில்களை அறிவித்துள் ளோம். அதனால் ரயில்கள் பற்றாக்குறை எதுவும் இல்லை. தேவைப்பட்டால், இன்னும் அதிக ரயில்கள் இயக்கப்படும் என்று ஒவ்வொருவருக்கும் உறுதி அளிக்கிறேன்.
ரயில்களில் பயணிக்க கரோனா நெகட்டிவ் சான்றி தழ் தேவையில்லை. மராட் டிய மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ரயில் சேவையை குறைப்பதற்கோ, நிறுத்துவ தற்கோ அந்த மாநில அரசு எங்களுக்கு கோரிக்கை விடுக்க வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment