சென்னை, ஏப்.1 பிரதமர் மோடி வருகையின்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கைது செய்யப் பட்டனர். விவசாயிகள் கைது செய்யப் பட்டதற்கு எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது,
விவசாயிகள் விரோத, மக்கள் விரோத பாசிச மோடி வருகையை கண்டித்து கருப்புக் கொடி காட்டிய தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரை கைது செய்துள்ள தை எட்டு வழிசாலை எதிர்ப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது!
தேர்தல் பிரச்சாரத்திற்காக வருகை புரிந்த மக்கள் விரோத, விவசாயிகள் விரோத பாசிச மோடியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கருப்பு பலூன்களை காட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர், விவசாயத்தை அழிக்கும் மின் கோபுரங்கள், எண்ணெய் குழாய் பதிப்பு, 8 வழி சாலை மற்றும் மூன்று வேளாண் சட்டங்கள் என்று பல்வேறு திட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக் காக கார்ப்பரேட் எடுபிடி மோடி அரசு நிறைவேற்றி வருகிறது. இத்தகைய விவசாய விரோத திட்டங்களை நிறைவேற்றி வரும் மோடியை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கருப்பு பலூன் களை காட்டி தங்கள் எதிர்ப்பை ஜனநாயக வழியில் காட்டினர், உலகத்தின் பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும்
இவர்கள் விவசாயிகளின் நியாயமான எதிர்ப்புணர்வை கூட மதிக்காமல் தங்கள் ஏவலர்களான காவல்துறையை வைத்து 24- விவசாயிகளை கைது செய்துள்ளது.
இக்கைதை எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது, கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
No comments:
Post a Comment