ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க தயார் - அமெரிக்கா அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க தயார் - அமெரிக்கா அறிவிப்பு

வாசிங்டன், ஏப். 10- ஈரான் 2015ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து போட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெ ரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்சு, சீனா மற்றும் ஜெர் மனி ஆகிய நாடுகள் கையெ ழுத்து போட்டன. முழுமை யான கூட்டு செயல்திட்டம் என்றழைக்கப்படுகிற இந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப் பந்தம் ஈரான் அணு ஆயுத திட்டங்களை கைவிடவும், யுரேனியம் கையிருப்பை 15 ஆண்டுகளில் குறைக்கவும், அதற்கு பதிலாக அமெரிக்கா வும், அய்ரோப்பிய நாடுகளும் அந்த நாட்டின்மீதான பொரு ளாதார தடைகளை திரும்பப் பெறவும் வழிவகை செய்து உள்ளது.

ஒபாமா காலத்தில் மேற் கொள்ளப்பட்ட இந்த ஒப் பந்தத்தில் இருந்து, அவருக்கு பின்னர் வந்த டிரம்ப் காலத்தில் (2018) அமெரிக்கா விலகியது. இப்போது அமெ ரிக்காவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜோ பைடன் அதிபராகி இருக்கிறார். இந்த நிலையில், அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு ஒவ்வாத வகையில் ஈரான் மீது போடப்பட்ட பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ள அமெரிக்கா தயாராக இருப் பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை அந்த நாட்டின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் வெளியிட்டுள் ளார். ஆனால் அதுபற்றிய கூடுதல் விவரங்களை அவர் வெளியிடவில்லை. வியன்னா வில் அமெரிக்காவும், ஈரானும் திரைமறைவு பேச்சுவார்த் தையில் பங்கேற்றுள்ள நிலை யில் இந்த அறிவிப்பு வெளி யாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment