யூதர்களைக் கொத்துக் கொத்தாய் கொன்ற சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி அடையாளம் ஸ்வஸ்திகா என்பது உலகினர் அனைவருக்கும் தெரியும். நாஜிக்களின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலை நினைவுக்குக் கொண்டுவருவது ஸ்வஸ்திகா சின்னமே. அந்தச் சின்னத்தைப் பயன்படுத்தி மீண்டும் மனிதநேயத்திற்கு எதிரான கருத்துகளோ, நாஜிக் கருத்துகளோ துளிர் விடக்கூடாது என்று கருதி அமெரிக்க அய்க்கிய நாட்டு - மேரிலாந்து சட்டமன்றத்தில்(House of Delgates)ஒரு சட்ட முன்வடிவு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ‘ஸ்வஸ்திகா’ சின்னம் வெறுப்பினை உருவாக்கும் அடையாளம் என்பதாக அந்தச் சின்னத்தின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கக் கோருவதாக சட்ட முன்வடிவு அமைந்துள்ளது. சட்ட முன்வடிவ எண்.0418 (House Bill 0418)என அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து அமெரிக்க இந்து அமைப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். எதிர்ப்பிற்கான காரணம், ஸ்வஸ்திகா என்பது இந்து மதத்தின் அடையாளம் எனக் கூறிவருகின்றனர். நாஜி சர்வாதிகாரி தன்னை ஆரிய இனத்திற்கு தலைவனாக பறைசாற்றிக் கொண்டார். இந்து மதமும், ஆரிய மயமானதை பறைசாற்றி வருவதில் பெருமைப்பட்டுக் கொள்கிறது.
நாஜிக் கருத்துகளின் அடையாளமான ஸ்வஸ்திகா சின்னத்தை அமெரிக்காவிலுள்ள இந்து அமைப்பு உரிமை கொண்டாடி ஸ்வஸ்திகா அடையாளத்தை மனிதநேய அடிப் படையில் குற்றமாகக் கருதிடும் சட்ட முன்வடிவை எதிர்ப்பது ஆரிய இனப் பெருமையை தூக்கிப் பிடிக்கும் செயலாகவே இருக்க முடியும். கடல் கடந்து செல்வதே இந்துமத சாஸ்திரத்திற்கு விரோதம். கடல் கடந்ததால் சாஸ்திரப்படி இந்து மதத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் நாஜிக்களின் ஸ்வஸ்திகா சின்னத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது அப்பட்டமான ஆரிய ஆணவம் அல்லாமல் வேறென்ன?
No comments:
Post a Comment