பா.ஜ.க. தோல்வி என்பது, அதன் நச்சுக் கொள்கைகள் நுழைந்துவிடாமல் தடுப்பதே -
தி.மு.க. கூட்டணியை வெற்றியடையச் செய்வது நமது கடமை!
மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி
சென்னை, ஏப்.1 நான் பெரியாருடைய கொள்கையை உள்வாங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பா.ஜ.க. வின் தோல்வி என்பது - அதன் நச்சுக் கொள்கைகளை நம் நாட்டில் நுழையவிடாமல் தடுப்பதே - தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்வது நமது கடமை என்றார் மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள்.
கலைஞர் செய்திகள்: ‘‘கேள்வியால் ஒரு வேள்வி''
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் ‘‘கேள் வியால் ஒரு வேள்வி'' பகுதியில் மேனாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
கேள்வி: இந்துத்துவா அரசியலுக்கு எதிராக இருக்கக்கூடிய முக்கியமானவர்களை வேட் டையாடக் கூடிய - அவர்களுக்குப் பல நெருக் கடிகளை தரக்கூடிய சூழலைத் தொடர்ச்சியாகப் பார்க்கிறோம்; அந்த அடிப்படையில், சில ஆண்டுகாலமாக உங்களுக்குப் பல நெருக் கடிகள் கொடுக்கப்பட்டு இருக்கிறதா?
பதில்: அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படு வதே இல்லை.
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்ப தில்லையே -
உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் -
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்ப தில்லையே!
கேள்வி: இந்துத்துவா அரசியலுக்கு எதிராக நீண்ட கால அரசியல் செய்தவர் என்கிற அடிப் படையில், கலைஞர் அவர்களை இன்றைக்கு இருந்து பார்க்கும்பொழுது, இவ்வளவு தாக் குதல்கள், அவர்மீது மோசமான விமர்சனங்கள் எல்லாவற்றையும் தாண்டி, 50 ஆண்டுகாலமாக ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் என்ற அடிப்படையில் பார்க்கும்பொழுது, அவரை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள்?
வரலாற்றில் கலைஞருக்கு
ஒரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது
பதில்: கலைஞர் அவர்கள் ஒரு திராவிடக் கட்சியினுடைய தலைவர். நாங்கள் இன்னொரு கட்சியில் இருக்கின்றவர்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்று வேறு வேறு கட்சிகளும் இருக்கின்றன.
நுணுக்கமான வேறுபாடுகள் கட்சிக்கு கட்சி வேறு படும். அது இல்லை என்று சொல்ல முடியாது. அதை கலைஞர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
ஆனால், கலைஞருடைய பங்களிப்பு, தமிழ்நாட் டிற்கு அவர் ஆற்றியிருக்கின்ற பங்களிப்பைப் பார்க்க வேண்டுமானால், 70 ஆண்டுகள் பேசினார், எழுதினார்.
நான் ஒரு கூட்டத்தில் சொன்னேன்,
‘‘எழுதி எழுதி மெலிந்த விரல்கள்,
பேசிப் பேசி கம்மிய குரல்'' என்று 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சொன்னேன்.
70 ஆண்டுகள் ஒரு மனிதர் எழுதியிருக்கிறார், பேசியிருக்கிறார் என்றால், யாருக்காகப் பேசினார்?
திராவிட சமுதாயத்திற்காக -
தமிழ்ச் சமுதாயத்திற்காக -
தமிழ் மொழிக்காக -
தமிழ் இனத்திற்காக -
தமிழ் கலாச்சாரத்திற்காகப் பேசினார்.
அந்தப் பங்களிப்புக்கு ஈடான ஒரு பங்களிப்பை 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் யாரும் ஆற்றவில்லை என்பதை நான் பகிரங்கமாகச் சொல்வேன்.
அந்தப் பங்களிப்புதான் தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்திற்கு, அவர் எழுதியது, பேசியது வரலாற்றில் அவருக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
கேள்வி: 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு நீங்கள் பேசிய ஒரு சில கூட்டங்களில், ஸ்டாலின் அவர்கள், பா.ஜ.க. அரசாங்கத்தை எதிர்த்து நிற்பதில் மிக உறுதியாக இருக்கிறார் என்று அவருக்குப் பாராட்டுகள் என்று பல கூட்டங் களில் தெரிவித்தீர்கள். அது எவ்வளவு கடின மான ஒரு பணி - எதிர்க்கட்சியாக 10 ஆண்டுகள் இருக்கக்கூடிய ஒரு கட்சி - ஆளுங் கட்சியாக இருக்கின்ற ஒரு கட்சியை, அதுபோன்று வலுவாக எதிர்த்து நிற்பது என்பது?
பதில்: அது கடினமான பணிதான். ஏனென்றால், நாளைக்கு ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக வந்த பிறகு, மத்தியில் பாரதீய ஜனதா கட்சியில்தான் இன்னும் மூன்றாண்டுகளுக்கு இருக்கப் போகிறது. ஆக, மத்திய அரசோடு இணக்கமாகத்தான் போகவேண்டும்; அதை நான் இல்லை என்று மறுக்கவில்லை.
ஆக, மத்திய அரசோடு இணக்கமாகப் போக வேண்டும்; அந்த மத்திய அரசை ஆளுகின்ற கட்சியை, இன்றைக்கு எதிர்க்கிறோம் என்றால், மிக ஜாக்கிர தையாக, அதாவது நெருப்பில் நடப்பது போன்றுதான் - மிக ஜாக்கிரதையாக நடக்கவேண்டும். அந்த கவனத்தோடுதான் நடக்கிறார் என்று நினைக்கிறேன்.
விமர்சனம் செய்யவேண்டிய இடத்தில் விமர்சனம் செய்கிறார்; தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறார். அழுத்த மான சொற்களைப் பயன்படுத்துகிறார். அதேநேரத்தில், யாரையும் வசைபாடுவது கிடையாது. யார்மீதும்
தவறான வார்த்தைகளைப் பிரயோகிப்பது கிடையாது.
ஆக, மிக ஜாக்கிரதையாகத்தான் நடந்துகொள்கிறார். அவருக்கு வெற்றி கிடைக்கவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சராக அவர் வரவேண்டும் என்று நான் வாழ்த்தியிருக்கிறேன்.
அதேநேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சராக வந்த பிறகு, மத்திய அரசோடு, கூடுமான வரையில் இணங் கித்தான் போகவேண்டும். இணக்கமாக இருப்பதில் தவறு கிடையாது.
அவர்களோடு கொள்கையில் இணக்கமாக இல்லாவிட்டாலும், திட்டங்களில், செயல்பாடுகளில் இணக்கமாகத்தான் இருக்கவேண்டும்.
கேள்வி: பா.ஜ.க. தரப்பிலிருந்து விமர்சனம் வைக்கும்பொழுது, தி.மு.க. இங்கே ஆட்சிக்கு வந்துவிட்டால், மத்திய அரசினுடைய திட்டங்கள் இங்கே எதுவுமே நிறைவேறாது என்று சொல்கிறார்களே?
அரசியல் சாசனம் தெரியாத, அறியாதவர்கள் பேசுகின்ற பேச்சு
பதில்: அதெல்லாம் அரசியல் சாசனம் தெரியாத, அறியாதவர்கள் பேசுகின்ற பேச்சு. அறியாமையின் காரணமாக பேசுகின்ற பேச்சு. அல்லது ஆணவத்தின் காரணமாகப் பேசுகின்ற பேச்சாக இருக்கலாம்.
நான் அவர்களுக்குப் ‘‘பெனிபிட் ஆஃப் டவுட்'' என்று சொல்கிறோமே, அதனைத் தருகிறேன்.
அறியாமையின் காரணமாக அவர்கள் பேசுகின் றார்கள் என்று நான் நம்புகிறேன். ஆணவத்தின் காரணமாக அவர்கள் பேசுகின்றார்கள் என்றால், அதை மக்கள்தான்
தட்டிக் கேட்பார்கள்.
கேள்வி: இந்தத் தேர்தலில், பூத் கமிட்டி அமைப்பதிலிருந்து பல்வேறு அடிப்படை பணிகள் வரைக்கும் நீங்கள் நேரிடையாக ஒருங்கிணைத்து மிக முனைப்பாக செய்வதைப் பார்க்க
முடிகிறது. ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது, நான் மிக உறுதியாக இருக்கிறேன், இந்துத்துவா அரசியலை கடைசிவரை எதிர்ப் பேன் என்றீர்கள். அவ்வளவு தூரம் முனைப்பாக நீங்கள் செய்யக்கூடிய காரணம் என்ன?
பதில்: காரணம், பாரதீய ஜனதா கட்சி அதனைச் செய்கிறதே! அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகமும் பெருமளவில் அதனைச் செய்கிறார்கள்.
இப்பொழுது பாரதீய ஜனதா கட்சியும், 'பேஜ் புரமோக்' வாக்காளர்ப் பட்டியலில் ஒரு பக்கத்திற்கு ஒரு நிர்வாகி என்று நியமிக்கிறார்கள். பூத் கமிட்டியைத்தான் வலியுறுத்துகிறார்கள்.
ஆக, அவர்கள் அதனைச் செய்யும்பொழுது, காங்கிரஸ் கட்சி அதில் பின்னடைவு காட்டக் கூடாது. அதற்கு ஈடாக நாம் செய்யவேண்டும் என்பதற் காகத்தான், 2019 இல் செய்ததைத்தான், இன்னும் தீவிரமாக இந்தத் தேர்தலில் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
கேள்வி: 2019 இல் நீங்கள் ஆற்றிய ஓர் உரையில், ‘‘தந்தை பெரியார் தான் எங்களுக்கும் பாட்டன், உங்களுக்கும் பாட்டன்'' என்று தி.மு.க. மேடையில் பேசியிருக்கிறீர்கள்?
எல்லோருக்கும் பாட்டன் தந்தை பெரியார்தான்!
பதில்: உண்மைதானே! தந்தை பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார் என்பது பல பேருக்குத் தெரியாது.
ஒரு காலத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர் தந்தை பெரியார். பிறகு விலகி, திராவிடர் கழகத்தை அமைத்து, அதனுடைய தலை வராக இருந்தார்.
ஆக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் ஒரு காலத்தில் அவர்தான் தலைவர். திராவிடர் கழகத்திற்கும் அவர்தான் தலைவர்.
ஆக, எல்லோருக்கும் பாட்டன் அவர்தான்.
கேள்வி: பெரியாரியப் பார்வையையும் சேர்த்து உள்வாங்கிக் கொண்டு பயணிக்கவேண்டிய இடத்தில் இன்றைக்குக் காங்கிரஸ் இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாமா?
பெரியாரியப் பார்வையை உள்வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன!
பதில்: நான் பெரியாரிய பார்வையை உள்வாங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
‘கணையாழி' பத்திரிகையை நான் பொறுப்பேற்று சென்னையில் நடத்தியபொழுது, தீபாவளி மலருக்கு எல்லோரும் சங்கராச்சாரியாரைப் பேட்டி கண்டு அட்டையில்
போடுவார்கள். நான் பெரியாரைப் பேட்டி கண்டு அட்டைப் படத்தில் போட்டேன்.
கேள்வி: உங்களுடைய பேச்சுகள் என்றால் எல்லோருக்கும் உடனடியாக நினைவுக்கு வருகின்ற
ஒரு விஷயம் திருக்குறள். இன்றைக்கு உள்ள மோடி அரசாங்கத்தை விமர்சித்து ஒரு திருக்குறள் சொல்லுங்களேன்?
மோடி ஒன்றும் மகாராஜா அல்ல - சக்கரவர்த்தி அல்ல!
பதில்: மோடி அரசாங்கம் என்பது, அமைச்சர் களையெல்லாம் வேலையாட்களாக நடத்துகின்ற அரசு.
மோடி ஒருவர்தான் -
மோடி சிந்தனை - மோடி சொல் - மோடி செயல் - மோடி எழுத்து - மோடி முடிவு.
இது ஜனநாயகம் இல்லையே!
மோடி ஒன்றும் மகாராஜா அல்ல - சக்கரவர்த்தி அல்ல.
அந்தக் காலத்தில் சக்கரவர்த்தி, மகாராஜாக்களுக் குக்கூட அவர்களுக்கு அமைச்சு என்ற ஒன்று இருந்தது.
திருக்குறளில் ஒரு அத்தியாயமே இருக்கிறது அமைச்சு என்று.
அமைச்சர்கள் எல்லோரும் கலந்து முடிவெடுப் பதுதான், ராஜாவாக இருந்தாலும். மோடி ராஜா அல்ல.
அமெரிக்க ஜனாதிபதிகூட அல்ல. டிரம்ப் நினைத்தார், தான் மகாராஜா என்று. அவர் நிலை என்னாயிற்று?
Scepter and Crown Shall tumble down என்று ஒரு பாடல் இருக்கிறது.
கிரீடமும், செங்கோலும் ஒரு நாள் விழுந்துவிடும்.
மனிதர்களைத்தான், மனிதர்கள் தேர்ந்தெடுக் கிறார்கள்; மனிதர்கள்தான் அந்த நாற்காலியில் அமர்ந் திருக்கிறார்கள். தாங்கள் மனிதர்கள், மற்றவர்களும் அதில் உள்ள மனிதர்கள்
என்று - கூட்டு முயற்சிதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகம் முற்றிலும் இல்லாத ஓர் அரசு, பாரதீய ஜனதா கட்சி - மத்திய அரசு.
கேள்வி: இந்தத் தேர்தலில் வாக்களிக்கக் கூடிய ஒரு தமிழ் வாக்காளர் மிக முக்கியமான நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் என்றால், எதை நீங்கள் குறிப்பிடு வீர்கள்?
தமிழ் மொழிக்குப் பேராபத்து!
பதில்: மிக முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியது, தமிழ் மொழிக்குப் பேராபத்து - இந்தி மொழி தமிழ் மொழிமீது
உட்கார்ந்து, தமிழை அழித்துவிடும்.
தமிழ்க் கலாச்சாரத்திற்குப் பேராபத்து.
இந்து வேறு - முஸ்லிம் வேறு
இந்து வேறு - கிறிஸ்துவம் வேறு என்பது தமிழ்க் கலாச்சாரம் அல்ல.
இந்து, கிறித்துவர்கள், முஸ்லிம்களை இணைப்பது தமிழ் மொழியும், தமிழ் இனமும்தான்.
பாரதீய ஜனதா கட்சி புகுத்துகின்ற கலாச்சாரம் என்பது, தமிழ்க் கலாச்சாரத்தை அழித்துவிடும்.
மூன்றாவது மிக முக்கியமானது -
பாரதீய ஜனதா கட்சி சனாதன தர்மத்தை தன்னுடைய அடிப்படை கொள்கையாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதை திராவிட இயக்கமும், தேசிய இயக்கமும் தமிழ்நாட்டிலே உறுதியாக எதிர்க்கிறார்கள்.
தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணாவும் அதனை எதிர்த்தார்கள்.
மூன்று தலைமுறை சனாதன தர்மத்தை எதிர்த்து, இங்கே போராடி வென்றிருக்கிறது. மீண்டும் சனாதன தர்மம் நுழைந்துவிடாமல் பார்க்கவேண்டியது வாக்காளர்களுடைய கடமையாகும்.
ஆகவே, தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரம், தமிழ் இனத்தினுடைய தர்மங்கள் மூன்றையும் காப்பாற்று வதற்கு - பாரதீய ஜனதா கட்சி கூட்டணி வைத்திருக்கக் கூடிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும்.
அ.தி.மு.க. தேர்தலில் தோற்று, அந்த இடத்தை வெற்றிடமாக்கி, அதிலே திராவிட முன்னேற்றக் கழகம் அமரும்.
பாரதீய ஜனதா கட்சிக்கு ஏற்படக் கூடிய தோல்வி என்பது - அரசு போகாது - அரசு இருக்கும். ஆனால், அந்த நச்சுக் கொள்கைகள் தென்னாட்டிற்குள் நுழைந்துவிடாமல், தடுத்தோம் என்ற பெருமை தமிழ் நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.
- இவ்வாறு மேனாள் மத்திய
நிதியமைச்சர்
ப.சிதம்பரம் பேட்டியில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment