தி.மு.க. தொண்டரணி செயலா ளரும், சிறந்த கொள்கை வீரரு மான மானமிகு த.மாசிலாமணி எம்.ஏ. (வயது 73) அவர்கள் 1.4.2021 அன்று காலமானார் என் பதை அறிய மிகவும் வருத்தமும், வேதனையும் அடைகிறோம்.
மாணவர் ஹிந்தி எதிர்ப்புப் போரில் சிறந்த போராளியாகவும், அதன்பின் 18 ஆண்டுகால சிறை வாழ்க்கைப் பின்னரும், தடம் மாறாத இலட்சிய வீரராகவும் வாழ்ந்தவர்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக் கட்டுரையைக் கேட்டுப் பெற்ற போதுதான் இறுதியாக என்னிடம் பேசினார்.
அண்ணா அறிவாலயத்தில் பல ஆண்டு காலம் உழைத்த அந்தக் கொள்கை மாவீரனின் இழப்பு, திராவிடர் இயக்கத்திற்கே பெரும் இழப்பு ஆகும்!
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்.
அவருக்கு நமது வீரவணக்கம்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
2.4.2021
குறிப்பு: 2.4.2021 இன்று புவனகிரி அடுத்து புஆதிவராக நல்லூரில் உடல் அடக்கம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment