23.04.2021
டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· தெலுங்கானா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பை எடுக்காமல் உள்ளாட்சி தேர்தலை நடத்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆணையம் உடனே அமைத்து பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையை கண்டறிய தெலுங்கானா நீதிமன்றம் டி.ஆர்.எஸ். அரசுக்கு உத்தரவிட்டது.
· கரோனா தடுப்பூசிக்கு மூன்று விலையை ஒரு தனியார் நிறுவனம் விதித்திட மத்திய அரசு எப்படி அனுமதித்தது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மோடி அரசுக்கு கண்டனம்.
· கரோனா பிரச்சினை தேசிய அவசர நிலை. ஆக்ஸிசஜன், மருந்துகள் இருப்புகள் குறித்து மத்திய அரசு அறிக்கை அளித்திட உச்ச நீதிமன்றம் மோடி அரசுக்கு உத்தரவு.
தி டெலிகிராப்:
· கடந்த 25 ஆண்டு கால பாஜக ஆட்சியில் குஜராத்தில் ஒரு மருத்துவமனை கூட கட்டப்பட வில்லை என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது தான் மோடியின் குஜராத் மாடல் என்றும் தெரிவித்துள்ளது.
· கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் பற்றிய முன் கூட்டிய எச்சரிக்கையை மோடி அரசு அலட்சியம் செய்ததன் விளைவை நாடு அனுபவிக்கிறது என கரோனா தடுப்பு குறித்த ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· பாரதீய கிஷான் சங்கம் அழைப்பின்பேரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பதினையாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சாபில் இருந்து டில்லியின் எல்லைகளை நோக்கி பங்கேற்கச் சென்றனர்.
பி.பி.சி. நியூஸ் தமிழ்:
· இந்திய தலைநகர் டெல்லியில் கரோனா வைரஸ் உள்ளிட்ட நோய் குறைபாடுகளுக்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், தங்களின் மருத்துவ குறைபாடு களுடன் சேர்த்து, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment