தாய்லாந்தில் மியான்மா நாட்டின் மக்களுக்காக ஒலித்த பெண்ணின் குரல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 9, 2021

தாய்லாந்தில் மியான்மா நாட்டின் மக்களுக்காக ஒலித்த பெண்ணின் குரல்

மியான்மாவுக்கு உதவுங்கள்: பன்னாட்டு சமூகத்துக்கு இளம்பெண் உருக்கமுடன் கோரிக்கை

பாங்காக், ஏப்.9- அழகிப்போட்டிக்கு சென்ற இடத்தில் தன் நாட்டின் மக்களின் பாதுகாப்புக்காக ஓங்கி ஒலித்த பெண்ணின் குரல் சமூக வலை தளங்களில் வைரலாகி பரவிவருகிறது.

மியான்மா நாட்டைச்சேர்ந்த ஹான் லே என்ற இளம்பெண்மிஸ் மியான்மாபட்டம் வென்றார். வெற்றி பெருமிதத்துடன் பேச வேண் டிய அவர் உருக்கமுடன் பேசினார். அவர் பேசுகையில் மியான்மா நாட்டு இராணுவத்துக்கு எதிராகவும், மியான்மா நாட்டு மக்களின் பாது காப்புக்காகவும் பன்னாட்டு சமூகத் திடம் மன்றாடி கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

 தாய்லாந்தில் நடந்த அழகி போட்டியில் அவர் பேச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதில் மியான்மா இராணுவத் துக்கு எதிராக வலுவான குரலை அவர் பதிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடைய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

தாய்லாந்தில் 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020’ என்ற போட்டியில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது,

இன்று எனது நாட்டில் பல மக்கள் கொல்லப்பட்டு இருக்கி றார்கள். ஜனநாயகத்துக்காக மியான்மா மக்கள் சாலைகளில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள். மியான்மாவுக்கு உதவுங்கள். பன் னாட்டு உதவி மியான்மாவுக்கு தற் போது அவசியம் தேவைப்படுகிறது. சிறந்த உலகை உருவாக்குவோம்என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

மியான்மா இராணுவத்துக்கு எதிராக குரல் கொடுத்ததன் காரணமாக ஹான் லே நாடு திரும்பாமல் தாய்லாந்திலேயே தங்கி இருக்கிறார்.

மியான்மாவில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி புதிய அரசை ஏற்க இராணுவம் மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக மியான்மா நாட்டின் அரசுக்கும், இராணுவத்துக் கும் இடையே மோதல் நீடித்துவந்த நிலையில் அண்மையில் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, இராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மாவின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர் களையும் வீட்டுக் காவலில் அடைக் கப்பட்டனர். மியான்மா நாட்டில் தற்போது அந்நாட்டு இராணுவம் அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். போராட்டத்தை அடக்க அந்நாட்டு இராணுவம் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகை ஆகியவற்றை பயன்படுத்தி வருகிறது. 300-க்கும் மேற்பட்ட மியான்மா நாட்டு குடிமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகிப்போட்டிக்கு சென்ற ஹான் லே மிஸ் மியான்மா அழகிப் போட்டிக்கான பட்டத்தை வென்ற துடன், தன் நாட்டின் மக்களுக்காக உருக்கமுடன் பேசிய பேச்சால் பன் னாட்டளவில் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். தம் நாட்டின் மக்கள் இராணுவ அடக்குமுறைக்கு எதிராக போராடிவரும் நிலையில், அழகிப் போட்டியில் பங்கேற்று வென்ற ஹான் லே தன் பங்காக பன்னாட்டு சமூகத்தின் கவனத்திற்கு மியான்மா நாட்டின் பிரச்சினையைக் கொண்டு சென்றுள்ளார்.

No comments:

Post a Comment