நேபாளம்: காற்று மாசுபாடு காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

நேபாளம்: காற்று மாசுபாடு காரணமாக அனைத்துப் பள்ளிகளும் மூடல்

 காத்மாண்டு, ஏப். 1- நேபாளத் தில் காற்று மாசுபாடு கார ணமாக அனைத்துப் பள்ளி களும் மூடப்படுவதாக அந் நாட்டு அரசு தெரிவித்து உள்ளது.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந் தியா - சீனா நாடுகளுக்கு இடையே இமயமலை பகு தியில் அமைந்துள்ள நேபாள நாட்டின் பல்வேறு பகுதிக ளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி, குப் பையை தீ வைத்து எரித்தல், வாகனப்புகை, கட்டுமானத் துறை பணியின் போது ஏற் படும் மாசு உள்ளிட்ட பல் வேறு காரணங்களால் அந் நாட்டில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனாவில் நிலவி வரும் காற்று மாசுபாடும் நேபாளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில். காற்று மாசுபாடு காரணமாக பள்ளி செல்லும் மாணவ, மாணவி களுக்கு, பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சுவாசப் பிரச்சினைகளும் ஏற்பட்டுள் ளது. மேலும், பலருக்கும் கண் எரிச்சல், இருமல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளும் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்து வருவ தால் மாணவ, மாணவி களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு நேபாளத் தில் உள்ள அனைத்துப் பள்ளி களும் மூடப்படுவதாக அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம்தெரிவித் துள்ளது.

மேலும், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

காற்று மாசுபாடு காரண மாக நேபாளத்தில் பள்ளிகள் மூடப்படுவது இதுவே முதல் முறையாகும். ஏற்கெனவே கரோனா வைரசை கட்டுப் படுத்த முடியாமல் திணறி வரும் நேபாள அரசுக்கு தற் போதைய காற்று மாசுபாடு கூடுதல் சுமையாக அமைந்து உள்ளது.

No comments:

Post a Comment