இந்தியாவில் புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 23, 2021

இந்தியாவில் புதிய கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

புதுடில்லி, ஏப்.23 இந்தியாவில் புதிய கரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த கரோனா வைரஸ், அதிக தொற்றை ஏற்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு தப்பிக்கும் பிறழ்வை கொண்டுள்ளது.ஆனால் இது இந்திய அளவிலோ அல்லது மேற்கு வங்காளத்திலோ கரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கு காரணம் ஆகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

இந்த புதிய வைரஸ், பி.1.618 என அழைக்கப்படுகிறது. இது இரட்டை பிறழ்வு வைரஸ் என அறியப்படுகிற பி.1.617 வைரசில் இருந்து மாறுபட்ட தாகும்.

இதுகுறித்து டில்லி சி.எஸ்.அய்.ஆர். மரபணு மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் அனுராக் அகர்வால் கூறுகையில், “இதற்காக அலறத்தேவையில்லை. நிலையான பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது போதுமானதுஎன குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment