"தமிழ்நாடு" சொல்லிப்பார் தேன்பாயும் செவிகளிலே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 2, 2021

"தமிழ்நாடு" சொல்லிப்பார் தேன்பாயும் செவிகளிலே!

                தமிழ்நாட்டின் பெயர்மாற்றி

                தஷிணப்பிரதேசமா?

                அமிழ்தான எம் நாட்டின்

                பெயர்மாற்றத் துணிவாயா?

                அதற்கான ஒத்திகைதான்

                உன்கட்சி விளம்பரமா?

                எம்தாயின் பெயர்மாற்ற

                உனக்கென்ன அதிகாரம்?

                எம்தாயை அவமதித்த

                பழிபாவம் பொறுப்போமா?

                உணர்வோடு விளையாடி

                வினைதேடிக் கொள்ளாதே!

                பல்துறையின் தாய்மடியாய்

                நாகரிகத்தின் தொட்டிலாய்

                தொல் சிறப்புப் பெற்றுயர்ந்த

                தமிழ்நாட்டைப் பகைக்காதே!

                கனகருக்கும் விசயருக்கும்

                நேர்ந்த கதி கேட்டுப்பார்!

                கல்சுமந்த வரலாற்றைச்

                சொல்வதெங்கள் சிலம்பன்றோ?

                வீண்வம்பு தேடாதே!

                மொழியோடு விளையாடாதே!

                "தமிழ்நாடு" சொல்லிப்பார்!

                தேன்பாயும் செவிகளிலே!

 -மறைமலை இலக்குவனார்

No comments:

Post a Comment