வேகமாக வளரும் தொழில்நுட்பங் களில், மூளைக்கும் கணினிக்கும் இடைமுகம் ஏற்படுத்தும் நுட்பமும் ஒன்று. 'பேஸ்புக்', தனது பயனாளிகளின் மனதைப் படிக்க ஒரு இடைமுகத்தை ஆராய்ந்து வருகிறது. எலான் மஸ்கிற்கு சொந்தமான, நியூராலிங்க், மனித மூளைக்குள் ஒரு சிறு கருவியை பதித்து, மூளைத் திறனை பன்மடங்காக்க முயன்று வருகிறது.
இந்த நுட்பங்களுக்காக, மூளை அல்லது மண்டையோடு அருகே கருவி களை பதிக்க வேண்டி உள்ளது. இதற்கு மாற்றாக, நடைமுறை மீயொலி இருக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கருது கின்றனர்.
அமெரிக்காவிலுள்ள, கலிபோர் னியா தொழில்நுட்ப நிலைய ஆராய்ச்சி யாளர்கள், மூளையின் இயக்கத்தை, நடைமுறை மீயொலி அலைகள் துல்லியமாக படம்பிடித்துவிடும் என கூறுகின்றனர்.
இதன் மூலம், ஒரு குரங்கின் மூளையை, நடைமுறை மீயொலி கருவி மூலம் கண்காணித்தால், அது அடுத்து எந்த திசையில் கண்களை திருப்பும், எந்தக் கையால் பொருளைத் தொடும் என்பவைகளை இயக்கப்படங்களாக எடுக்க முடியும்.
இந்தப் படங்களை செயற்கை நுண் ணறிவு மென்பொருள்களிடம் கொடுத்தால், 89 சதவீதம் வரை துல்லியமாக, குரங்கின் அடுத்த அசைவுகளை கணிக்க முடிவதாக, ஆய்வாளர்கள் நியூரான் இதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவித்து உள்ளனர்.
No comments:
Post a Comment