டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· வரலாறு, அறிவியல், பசு குறித்த பாஜகவினர் பேச்சு வித்தியாசமானது. பிரதமர் மோடி தனது கட்சியைத் துவக்கிய ஷ்யாம் பிரசாத் முகர்ஜி குறித்து பேசுகையில் அவர் புரட்சியாளர். 1930இல் லண்டனில் இறந்தார் என்றார். ஆனால், முகர்ஜி நேரு அமைச்சரவை யில் அமைச்சராக இருந்தவர். இதற்கு முன்னர் ஹிந்து மகாசபை உறுப்பினர். இறந்தது ஜம்மு சிறையில் 1953-ஆம் ஆண்டு என ஊடக நெறியாளர் கரன் தாப்பர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
· மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரின் சிறு சேமிப்புக் கணக்குக்கு வட்டி விகிதத்தை மோடி அரசு குறைத்து வெளியிட்ட அறிவிப்பை தேர்தல் காரணத்தால், திரும்பப் பெற்றுக் கொண்டது.
· கருநாடகாவில் முந்தைய குமாரசாமி ஆட்சி கவிழ்க்கப் பட்டது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது ஆளும் பாஜக அரசுக்கு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் குறித்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தி டெலிகிராப்:
· மேற்கு வங்கம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் அம் மாநில முதல்வர் மம்தா வாக்குச் சாவடியில் இரண்டு மணி நேரம் முடக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஆளு நருக்கு புகார் அனுப்பி யுள்ளார் முதல்வர்.
· சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் நரேந்திர மோடி அரசாங்கம் சாமான்ய மக்களை தாக்கியுள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
· சட்டவிரோத மதமாற்றம் என்ற தவறான குற்றச்சாட்டுக்கு இரண்டு கன்னியாஸ்திரிகள் மற்றும் இரண்டு பெண்கள் 13 நாட்களுக்கு முன்பு ரயிலில் இருந்து கட்டாயப்படுத்தப்பட்டு ஜான்சி சந்திப்பில் உள்ள ஜிஆர்பி நிலையத்தில் நான்கு மணி நேரம் அமர வைக்கப்பட்டது தொடர்பாக
ஏபிவிபி உறுப்பினர்களுக்கு எதிராக ரயில்வே காவல்துறையினர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
- குடந்தை கருணா
2.4.2021
No comments:
Post a Comment