ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய ரிலையன்ஸ் முன்னாள் அதிகாரி ஜைன மத துறவியானார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 30, 2021

ரூ.75 கோடி சம்பளம் வாங்கிய ரிலையன்ஸ் முன்னாள் அதிகாரி ஜைன மத துறவியானார்

புதுடில்லி, ஏப்.30 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் வலது கரமாகத் திகழ்ந்தவர் பிரகாஷ் ஷா (64). இவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் திட்டப் பிரிவு துணைத் தலைவராக இருந்தவர்.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்புஏற்பட்ட உடனேயே ஆடம்பர வாழ்க்கையைத் துறந்தார். கடந்த 25 ஆம் தேதி வெள்ளை ஆடை உடுத்தி ஜைன துறவிக்கான தீட்சையை பெற்றார். இவருடன் இவரது மனைவி நைனா ஷாவும் துறவறம் பூண்டுள்ளார்.

இரசாயன பொறியியல் பிடெக் மற்றும் எம்டெக் பட்டம்பெற்றவர். அய்அய்டி பாம்பேயில் பட்டம் பெற்ற இவர், ரிலையன்ஸ் திட்டப் பிரிவின் துணைத் தலைவராக பதவி வகித்தார். ஓய்வுபெறும்போது இவரது ஆண்டு சம்பளம் ரூ.75 கோடியாகும்.

இவரது இளையமகன் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனது  24 ஆவது வயதில் ஜைன துறவியானது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment