45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 2, 2021

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடக்கம்

புதுடில்லி, ஏப்.2 நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இதுகுறித்து தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதி காரியும், கரோனா தடுப்பூசி திட்டத்தின் உயர் அதிகாரம் கொண்ட குழுவின் தலைவருமான மருத்துவர் ஆர்.எஸ்.சர்மா பேசினார்.

இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசிகளை பாதுகாத்து வைப்பதில் அர்த்தம் இல்லை. தடுப்பூசி தேவையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாநிலங்களுடனான தடுப்பூசி வினியோகத்தில் தட்டுப்பாடு இல்லை. தடுப்பூசிகளை சேமித்து வைப்பதில் பிரச்சினை ஏதும் இல்லை. தடுப்பூசி தொடர்பான தளவாடங்களுக்கும் பிரச்சினை இல்லை. மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசி வினியோகம் தொடர்ந்து செய்யப்படும் எனவும் அவர் மத்திய அரசின் சார்பில் உறுதிபட தெரிவித்தார்.சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களை பொறுத்தமட்டில் தகுதி வாய்ந்த பயனாளிகளை மட்டுமே பதிவு செய்து, தடுப்பூசி போடுவதை மாநிலங்கள் உறுதிசெய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது.

தடுப்பூசி திட்டத்தில் தனியார் தடுப்பூசி மய்யங்களின் ஈடுபாட்டை பொறுத்தமட்டில், அந்த மய்யங்களின் தடுப்பூசி பயன்பாடு எப்படி உள்ளது என்பது பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடத்த வேண்டும், கூடுதல் தடுப்பூசி மய்யங்கள் அமைப்பது தொடர்பாக பகுப்பாய்வு செய்ய வேண்டும், தடுப்பூசி வினியோகம் தொடர்பான தனியார் தடுப்பூசி மய்யங்களின் அச்சத்தை போக்க வேண்டும், ஆக்கப்பூர்வமான வழிமுறை களை கூற வேண்டும் என்றும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டன.

தடுப்பூசி இருப்பினை பொறுத்தமட்டில், அதிகளவு இருப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், அதே நேரம் குளிர் சங்கிலி முனையங்களில் போதிய அளவு இருப்பு இருக்க வேண்டும், பயன்பாடு அடிப்படையில் வினியோகங்கள் இருக்கு மாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment