தான்சானியா அதிபரின் இறுதி நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 1, 2021

தான்சானியா அதிபரின் இறுதி நிகழ்வு கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு

டோடோமா, ஏப். 1- தான்சானியா அதிபருக்கு இறுதி மரியாதை செலுத் துவற்காக பொதுமக்கள் கூடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 45 பேர் உயிரிழந்துள்ளனர்.

தான்சானியா நாட்டின் அதிபராக இருந்தவர் ஜான் மகுஃபுலி, கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 61 வயதான ஜான் மகுஃபுலி, சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த 17 ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி நிகழ்வில், ஜான் மகுஃபுலிக்கு இறுதி மரியாதை செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இந்த நிகழ்வில் திடீரென நெரிசல் ஏற்றட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 45 ஆக உயர்ந்துள்ளது. அதிபர் இதயம் தொடர்பான நோயால் உயிரிழந்துள்ளார் என்று அரசு தெரிவித்தா லும், எதிர்க்கட்சி தலைவர்கள் கரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதிகளின் வெறிச்செயல்

மொசாம்பிக் நாட்டில் 50 வெளிநாட்டினர்

தலை துண்டித்து கொலை

மொசாம்பிக், ஏப். 1- மொசாம்பிக் நாட்டில் அய்.எஸ் பயங்கரவாதிகள் வெளிநாட்டினர் 50 பேரின் தலையை வெட்டிக் கொலை செய்துள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.

மொசாம்பிக் நாட்டில்  வெளிநாட்டவர்கள் மீது  அய்.எஸ் பயங்கரவாத அமைப்பு  கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளது. சுமார் 50 பேர்களின் தலையை வெட்டிக் கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 17 வாகனங் களில், வெளியேறிய நிலையில், அவர்கள் மீது அய்.எஸ் அமைப்பு சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து பலரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து தற்போது அவர்களை கொடூரமாக கொலைசெய்து உள்ளது  தெரிய வந்துள்ளது.

53,000 பேர்கள் குடியிருக்கும் சுரங்க நகரமான பால்மாவை சுமார் 100 அய்.எஸ் பயங்கரவாதிகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாக கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய இயற்கை எரி வாயு சேகரிக்கும் பகுதியாக பால்மா அறியப்படுகிறது. இப்பகுதியில் இருந்து சுமார் 1,400 பேர்  படகு மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தெருவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பலரது உடல்கள்  காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment