புதுடில்லி, ஏப்.1 பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க நேற்று (31.3.2021) கடைசி நாள் என்று கூறப்பட்டது. தவறினால் பயனர்களின் பான் கார்ட் முடக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதோடு அபராத தொகையும் செலுத்த வேண்டி உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31-ஆம் தேதியுடன் பான் - ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான அவகாசத்தை நீட்டித்து வருவான வரித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பான் - ஆதார் எண் இணைப்புக்கான அவகாசத்தை நீட்டித்துள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment