கரோனா பரவலை கட்டுப்படுத்த 26 நாடுகளின் பயணிகளுக்கு கட்டுப்பாடு: அயர்லாந்து அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 3, 2021

கரோனா பரவலை கட்டுப்படுத்த 26 நாடுகளின் பயணிகளுக்கு கட்டுப்பாடு: அயர்லாந்து அரசு அறிவிப்பு

டப்ளின், ஏப். 3- அயர்லாந்துக்கு வரும் 26 நாடுகளின் பயணி கள் தங்களை 14 நாட்கள் விடுதி அறைகளில் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அய்ரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில், கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து கரோனா தொற்று பரவுவதை தடுக்க அயர்லாந்து அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி அயர்லாந்து நாட்டுக்கு வரும் 26 நாடுக ளின் பயணிகள் தங்களை 14 நாட்கள் ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் உள்ள நாடுக ளின் பட்டியல் பின்வருமாறு;-

அல்பேனியா, அண் டோரா, அரூபா, பஹ்ரைன், போனைர், சிண்ட் யூஸ்டேடி யஸ் மற்றும் சாபா, இஸ்ரேல், ஜார்டன், கோசோவோ, குவைத், லெபனான், மால் டோவா, மோனாகோ, மாண் டெனெக்ரோ, நைஜீரியா, வடக்கு மாசிடோனியா, ஓமன், பாலஸ்தீன், பிலிப் பைன்ஸ், போர்டா ரிக்கோ, கதார், செயிண்ட் லூசியா, சான் மாரினோ, செர்பியா, சோமாலியா, வாலிஸ் மற்றும் ஃபுட்டுனா தீவுகள்.

மேற்கண்ட நாடுகளில் இருந்து அயர்லாந்துக்கு வரும் பயணிகள், கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு 14 நாட்கள் விடுதி அறை களில் தங்களை தனி மைப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அயர் லாந்து நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச் சகம் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment