புதுடில்லி, ஏப்.24 ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் நேற்றிரவு உயிரிழந்ததாக டில்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தலைநகர் டில்லி கரோனாவின் பிடியில் சிக்கி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அங்குள்ள பல மருத்துவமனைகளில் தீவிரமான பாதிப்பில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் நெருக்கடி தொடர்கிறது.
டில்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்றிரவு 20 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் விநியோகம் இன்னும் அரை மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் மேலும் 200 பேரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.
No comments:
Post a Comment