தேர்தல் களத்தில்..... தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 2, 2021

தேர்தல் களத்தில்..... தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

.தி.மு.., - பா... கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தல் போன்று

சட்டமன்ற தேர்தலிலும் பாடம் புகட்ட வேண்டும்

- தளபதி மு..ஸ்டாலின்

.தி.மு..-பா... கூட்டணிக்கு நாடாளுமன்ற தேர்தலை போன்று சட்டமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கொளத்தூரில் வீதி, வீதியாக பிரச்சாரம் செய்து தளபதி மு..ஸ்டாலின் பேசினார்.

தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக வேட்பாளராக போட்டியிடுகிறார். மேலும் அவர், தி.மு.. கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராகவும் களத்தில் நிற்கிறார். எனவே மு..ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

தளபதி மு..ஸ்டாலின் கடந்த 27ஆம் தேதி, கொளத்தூர் தொகுதியில் முதற்கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

விழாக்கோலம்

இந்தநிலையில் அவர் கொளத்தூர் தொகுதியில் நேற்று (31.3.2021) 2ஆம் கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஜி.கே.எம். காலனி பட்டுமேடு பகுதியில் மாலை 5.10 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்கிய மு..ஸ்டாலின், கொளத்தூர் அண்ணா சிலை அருகே இரவு 7.10 மணியளவில் நிறைவு செய்தார். அவர் 2 மணி நேரம் நின்றபடி திறந்த வாகனத்தில் தொகுதியை சுற்றி வந்து வாக்குசேகரித்தார்.

தளபதி மு..ஸ்டாலினுக்கு தி.மு..வினரும், தொகுதி மக்களும் வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் குழந்தைகள், பெண்கள் ஆர்வத்துடன் கைகுலுக்கினர். பேருந்தில் சென்ற பயணிகளும் மு..ஸ்டாலினை பார்த்த மகிழ்ச்சியில் அவருக்கு கைகொடுத்தனர். 

கடும் சுற்றுப்பயணம்

கொளத்தூர் தொகுதியில் தளபதி மு..ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி பேசியதாவது:-

என்னுடைய தொகுதிக்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால், உங்களுக்கு கோபம் வரும். எனவே நம்முடைய கொளத்தூர் தொகுதிக்கு வந்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துக் கொண்டிருக்கிறேன். நான் எங்கே இருக்கிறேன், எங்கே சாப்பிடுகிறேன், எங்கே தூங்குகிறேன், எங்கே பயணிக்கிறேன்? என்ற ஒரு குழப்பமான நிலையில்தான் பிரசாரத்தை நடத்திக்கொண்டிக்கிறேன். காரணம் கடும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருக்கிறேன். நாளை (2.4.2021) விமானம் மூலம் திருச்சிக்கு சென்று பெரம்பலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறேன்.

கடைசி ஒரு மணி நேரம்

நடைபெற இருக்கிற தேர்தல் ஏதோ ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் மட்டுமல்ல. நான் முதல்-அமைச்சராக வேண்டும், தி.மு..வினர் சட்டமன்ற உறுப்பினர்களாக வர வேண்டும் என்பதற்காக நடக்கும் தேர்தல் அல்ல.

நம்முடைய தன்மானம், சுயமரியாதை பாதுகாக்கப்பட வேண்டும். பழனிசாமி ஆட்சியில் நம்முடைய சுயமரியாதையை இழந்திருக்கிறோம். நம்முடைய மாநில உரிமைகளை இழந்திருக்கிறோம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே இதனை எல்லாம் மீட்பதற்கு தான் இந்த தேர்தல்.

உங்கள் வீட்டு பிள்ளை

பா... ஒரு இடத்தில் கூட வெற்றி பெறப் போவது இல்லை. அதே நேரத்தில் .தி.மு..வும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்று விடக் கூடாது. ஏனென்றால் .தி.மு.. வெற்றி பெற்றால் .தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள். பா... சட்டமன்ற உறுப்பினர்களாக தான் இருப்பார்கள். எனவே அந்த மாதிரியான சூழல் வந்துவிடக் கூடாது. மதவெறி பிடித்த பா...வுக்கு நாடாளுமன்ற தேர்லில் எப்படி பாடம் புகட்டினீர்களோ? அதேப் போன்று சட்டமன்ற தேர்தலில் சரியான பாடத்தை அவர்களுக்கு (.தி.மு..-பா... கூட்டணி) வழங்க வேண்டும்.

உதயசூரியன் சின்னத்துக்கு ஆதரவு அளித்து உங்கள் வீட்டு பிள்ளையை தேர்ந்தெடுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மயிலாப்பூரில் பிரச்சாரம்

தி.மு.. வேட்பாளர்கள் .வேலு (மயிலாப்பூர்), ஜெ.கருணாநிதி (தியாகராயநகர்), டாக்டர் எழிலன் (ஆயிரம் விளக்கு) ஆகி யோரை ஆதரித்து தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் மயிலாப்பூரில் நேற்றிரவு (1.4.2021) திறந்தவேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

 திராவிடர் கழகம் சார்பில் வரவேற்பு

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் வாகனப் பிரச்சாரத்தின் போது ஆங்காங்கே திராவிடர் கழகக் கொடிகளோடு திரண்ட கழகத் தோழர்கள் அவருக்குச் சிறப்பான வரவேற்பளித்தனர்.

கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கும் பா...:

தொல்.திருமாவளவன்

சென்னை விருகம்பாக்கம் தொகுதி தி.மு.. வேட்பாளர் .எம்.வி.பிரபாகரராஜாவை ஆதரித்து, கலைஞர் கருணாநிதி நகர் சிவன் பூங்கா பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. நேற்று (1.4.2021) பிரசாரம் மேற்கொண்டார். திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து அவர் பேசியதாவது:-

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வழக்கமான சராசரி தேர்தல் அல்ல. சனாதன, பாசிச, சாதி-மதவாத ஒரு கூட்டணியை வீழ்த்தி தமிழகத்தை மீட்கப்போகும் தேர்தல். நமது போட்டிக்கட்சி .தி.மு.. அல்ல. ஏனென்றால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்த .தி.மு.. இப்போது இல்லை. இப்போதுள்ள .தி.மு.., மோடி .தி.மு..வாக இருக்கிறது. பா...வின் பினாமி கட்சியாக இருக்கிறது.

மதவெறி அரசியல்

இந்தியாவில் மதவெறி அரசியலை முன்னெடுத்து வரும் பா..., இந்தமுறை தமிழகத்தை வெகுவாக குறிவைத்திருக்கிறது. அதற்காக இங்கிருக்கும் ஆட்சியாளர்களை பா... பயன்படுத்தி கொள்கிறது. கொல்லைப்புறம் வழியாக தமிழகத்தில் கால்பதிக்க பா... நினைக்கிறது. எனவே மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். பா...வை பொறுத்தவரை இந்துக்களுக்கான ஒரே கட்சி என்று அவர்களே கூறிக்கொள்கிறார்கள். மற்ற கட்சிகளில் இந்துக்களே கிடையாதா? உண்மையிலேயே இந்துக்களுக்கு விரோதியே பா... தான். 234 தொகுதிகளிலும் நானே வேட்பாளர் என்று பிரதமர் நரேந்திரமோடி தாராபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே 234 தொகுதிகளிலும் அவரை தோற்கடிக்க நாம் உறுதியேற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.                           

மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை அஞ்சல் வாக்குகள் பெறப்படும் 

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை அஞ்சல் வாக்குகள் பெறப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்குகள் பெறப்படும் என்றும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து ஏப்ரல் 5ஆம் தேதி வரை அஞ்சல் வாக்குகள் பெறப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 80 வயது நிரம்பிய 92,559 முதியவர்களும், மாற்றுத்திறனாளிகள் 30,894 பேரும் அஞ்சல் வாக்களிக்க விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று காவல்துறை, அரசு ஊழியர்களுக்கான அஞ்சல் வாக்குகள் மே 2ஆம் தேதி காலை 8 மணி வரை பெறப்படும். மொத்தம் 4.66 லட்சம் அஞ்சல் வாக்குகளில் இதுவரை 1.31 லட்சம் வாக்குகள் மட்டுமே பெறப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment